தேனுடன் மஞ்சள்த்தூள் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன் – 4

எப்படி சாப்பிட வேண்டும்?

தினமும் காலை உணவிற்கு முன்பு இந்த கலவையை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வது ஒரு சிறந்த தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. உங்களுக்கு சளி இருந்தால், தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, இந்த கலவையை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். மறுநாள், இதன் இடைவெளியை அதிகரித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த சிகிச்சையை 3 நாட்கள் தொடர்ந்து செய்யலாம். இன்னும் சளிக்கான அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், இந்த சிகிச்சையை மேலும் அதிகரிக்கலாம். இந்த கலவை உங்கள் வாயில் கரையும் வரை இருக்கட்டும். இது மிகவும் இனிப்பான சுவையாக இருப்பதாக உணர்ந்தால், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இந்த கலவையைச் சேர்த்து பருகலாம். செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்கள், இந்த கலவையை வெதுவெதுப்பான நீரில் கலந்து உணவிற்கு முன்பு பருகி வரலாம்.

யார் சாப்பிடக்கூடாது?

பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் சேர்த்த எந்த ஒரு தீர்வையும் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணிகள் அல்லது குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த தீர்வை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்பது நல்லது.

இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் மருந்துகளின் பயன்பாட்டில், மஞ்சள் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். ஆகவே இதய கோளாறு அல்லது இரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்காக மருத்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த தீர்வைப் பின்பற்றலாம். அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டிருப்பவர்கள் இதன் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.