உலக கால்பந்து போட்டி நாளை ஆரம்பம்: ரசிகர்கள் உற்சாகம்

மாஸ்கோ, ஜூன்.13 –

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கால்பந்து போட்டிகள் 21வது முறையாக நாளை ரஷ்யாவில் ஆரம்பமாக உள்ளது. உலகில் கால்பந்து விளையாட்டில் சிறப்பபாக ஆடிவரும் 32 நாடுகள் பங்கேற்க உள்ளது. இந்த போட்டியை காண கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஜூன் மாதம் 14ம் தேதி ஆரம்பமாகும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் 15ம் தேதியுடன் முடிவடைகிறது.

பல கோடிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 12 நவீன கால்பந்தரங்கத்தை ரஷிய நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. பரிசுத் தொகை முதல் அணிக்கு 38 மில்லியன் டாலர் (3,80,000 லட்சம்) இரண்டாவது அணிக்கு 28 மில்லியன் டாலர் (2,80,000 லட்சம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்பந்தாட்டத்தில் முன்னணியில் உள்ள ஜெர்மனி, பிரேசில், போர்ச்சுகல், அர்ஜென்டினா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகியோர் அவர்களின் அணி வீரர்களை கோப்பையை தட்டிச்செல்ல தயார் செய்து வருகின்றனர்.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியில் இளம் வீரர்கள் நியர், கிம்மிச், ஹம்மல்ஸ் மற்றும் அனுபவம் பெற்ற முல்லர், பிரேசில் நாட்டு வீரர் நெய்மர், இளம் ஆட்டக்காரர் அல்லிசன் ஆகியோர் அவரவர் நாட்டு அணி வெற்றி பெற முனைப்புடன் களம் இறங்க ஆயத்தமாக உள்ளனர். இனி ஒரு மாதம் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.