சிஆர்ஐ பம்ப் நிறுவனத்துக்கு சிறந்த ஏற்றுமதிக்கான விருது

கோவை, ஜூன் 10–

இஇபிசி-யின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை, 14-வது முறையாக வென்று, புதிய சாதனையைப் படைத்திருக்கிறது சிஆர்ஐ பம்ப் நிறுவனம்.

பெரும் நிறுவனங்களின் கீழ், ஸ்டார் பெர்பார்மர் விருது 2016–-17 பிரிவில், சிறந்த ஏற்றுமதியாளர் விருதை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சி.ஆர்.சௌத்ரி வழங்கினார்.

இஇபிசி விருதுகள், இந்தியாவில் பல்வேறு தொழில்துறையில், பல்வேறு தளங்களில், மிகச்சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் கௌரவமிக்க விருதாகும்.

சிஆர்ஐ நிறுவனம், சிறந்த ஏற்றுமதி வர்த்தக செயல்பாடுகளுக்காக, 14 முறை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தனக்கென ஒரு தனி இடத்தை இத்துறையில் தக்கவைத்திருக்கிறது சிஆர்ஐ.

120 நாடுகளில் வர்த்தகம்

விருது பெற்றது குறித்து, சிஆர்ஐ நிறுவனத்தின், மார்க்கெட்டிங் பிரிவின் துணைத் தலைவர் ஆர்.பூபதி கூறுகையில், “இத்துறையில் முன்னோடியாக திகழ வேண்டும் என்ற தொலைநோக்கோடு, முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய, கடின உழைப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

சிஆர்ஐ இன்று, 120 நாடுகளில், தனது வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. திரவ மேலாண்மைக்கான தீர்வுகளையும், உலகத்தரத்திலான எங்களது தயாரிப்புகளை கொண்டு வழங்கி வருகிறோம்.

இஇபிசி எங்களது நிபுணத்துவத்திற்கும், ஏற்றுமதி வர்த்தக செயல்பாடுகளுக்கும் கௌரவிக்கப்பட்டிருப்பது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், உலகச்சந்தையில் புதிய உயரத்தைத் தொடும், இந்திய ப்ராண்டாக திகழ, சிஆர்ஐ தொடர்ந்து, தனது செயல்பாடுகளை தொடரும் என்றார்.

அதிநவீன தொழில்நுட்பங்கள்

சிஆர்ஐ, பம்ப் தயாரிப்பிலிருந்து, மிக மேம்பட்டு, எல்லா வித திரவ மேலாண்மைக்கு, தீர்வு வழங்கும் நிறுவனமாக, உருவெடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள, தனது 21 அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உற்பத்தி மையங்களின் மூலம், திரவ மேலாண்மைக்கான தீர்வுகளை அளித்து வருகிறது.

இங்கிலாந்து மற்றும் இத்தாலியில், கம்பெனிகளை கையகப்படுத்தி, சிஆர்ஐ உலகளவில் வலுபெற்றுள்ளது. மேலும், அமெரிக்காவில், கோல் பெட் மீத்தேன் மற்றும் மைனிங் செயல்பாடுகளுக்கான பம்புகள் வழங்கி, மிகவும் வலுவான சந்தையை கொண்டிருக்கிறது.

புதிய கண்டுபிடிப்பு தொடரும்

சீனாவுக்கு, அதிக மதிப்பில்லான பம்புகளை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் முதல் ஏற்றுமதியாளர் சிஆர்ஐ நிறுவனமாகும். ஆப்ரிக்காவில் சோலார் பம்பிங் சிஸ்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இப்பிரிவில் எங்களது சோலார் பம்பிங் சிஸ்டம் மிகப்பெரியது என்பது, குறிப்பிடத்தக்கது. இஇபிசி எங்களுக்கு அளித்திருக்கும் அங்கீகாரத்திற்கு, எங்களது நன்றியைத் தெரிவித்து கொள்ள விரும்புகிறோம். மேலும், திரவ மேலாண்மை தீர்வுகளில், இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளையும், தீர்வுகளை வழங்குவதில், தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவோம்.

எங்களது அனைத்து வாடிக்கையாளர்கள், டீலர்ககள், அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றும், எங்களது ஊழியர்கள் மற்றும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஆதரவையும், நம்பிக்கையையும் அளித்த நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறினார்.