ஜுராசிக் வேர்ல்டு திரைப்படத்தின் 2 நாள் வசூல் ரூ.270 கோடி

சென்னை, ஜூன் 9–

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ஜுராசிக் வேர்ல்டு 2–ம் பாகம் திரைப்படம், 2 நாளில் ரூ.270 கோடி வசூலித்துள்ளது.

கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் நடிப்பில், கோலின் ட்ரெவோரோவ் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ஜுராசிக் வேர்ல்டு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜுராசிக் வேர்ல்டு பாலன் கிங்டம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள 48 நாடுகளில் நேற்று வெளியானது. முதல் பாகத்தில் நடித்த கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஆகியோர் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். பயோனா படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் 2 நாளில் ரூ.270 கோடி வசூலித்துள்ளது. கொரியாவில், தி அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் மம்தி திரைப்படங்களை காட்டிலும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுபோல மற்ற நாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் அதிக வசூலை பெற்றுள்ளது ஜுராசிக் வேர்ல்டு. இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை தாண்டும் என படத்தின் வியாபார நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கின்றன. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய் வரை படம் வசூலித்துள்ளது. படத்துக்கு நல்ல வரவேற்று கிடைத்துள்ளதால், வார இறுதியில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.