ஐரோப்பிய நாடுகளில் 16 நாட்கள் – 2

  • ஏ.கே. சித்தரஞ்சன்

தேம்ஸ் நதி படகு சவாரி, லண்டன் பிரிட்ஜ், 7டி பிரமாண்ட சினிமா தியேட்டர்…

லண்டனில் இரண்டாவது நாள் சுவாமி நாராயணன் கோவிலைப் பார்வையிட்டோம். சுத்தமான, சுகாதாரமான கோவில் என்று இதை சொல்லலாம். எங்கும் அமைதி, சைகை தான். லட்சுமி, நாராயணன் ஆகியோரின் சிலைகள் ஜொலித்தன. 

சுற்றுலா வெற்றி பெற பிரார்த்தனை செய்தேன்.

அடுத்து வெஸ்ட் மினிஸ்டர் அபே பகுதியில் பார்லிமெண்ட் ஹவுஸ், அதில் உள்ள பிக்பென் கடிகார தூண் போன்றவை பிரம்மாண்டமாக கட்டிட கலைக்கு அழகூட்டின. பிக்பென் பராமரிப்புக்கான ‘சாரம்’ கட்டி மூடப்பட்டு இருந்தது.

அதே இடத்தில் அருகில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே சர்ச், அரச குடும்பத்தினர் பதவி ஏற்க இந்த தேவாலயம் வருவது சிறப்பு ஆகும்.

லண்டனில் ஏற்கனவே மகனுடன் இருந்த போது இங்கிலாந்தின் ராஜ்யத்தில் இளவரசர் சார்லஸ் மூத்த மகன் திருமணத்தை இந்த சர்ச்சில் நடந்ததை வீடியோவில் பார்த்த ஞாபகம் வந்தது.

லண்டனில் டிராபல்கர் சதுக்கம் உயர்ந்த தூண்கள் கொண்டுள்ளது.   
மத்திய லண்டனில் டிராபல்கர் சதுக்கம் என்பது பிரிட்டிஷ் கப்பற்படை, பிரெஞ்சு, ஸ்பெயின் நாட்டுடன் போரிட்டபோது, ஸ்பெயின்யில் உள்ள டிராபல்கர் முனை போரில் ஏற்பட்ட வெற்றியை குறிக்க ‘டிராபல்கர்’ என இந்த சதுக்கத்துக்கு பெயரிடப்பட்டது.
பொது மக்கள் கூட இந்த சதுக்கம் வசதியாக உள்ளது. இதில் நடுவில் 169 அடி நெல்சன் தூண் 4 சிங்கங்கள் உள்ளது.

இந்த சதுக்கத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ்க்கு 12 நாள் முன்பும், பிறகும் நிறுவ நார்வே நாடு பரிசளித்தது, இப்போதும் இது நிறுவப்படுகிறது.
இதில் ஒரு நீரூற்று உள்ளது. இந்த நெல்சன் தூணில் பிரிட்டிஸ் கப்பற்படை கமாண்டர் நெல்சன் சிலை அலங்கரிக்கிறது.

பிக்காட்லி சர்கிள்   

லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் ஷாப்பிங் தளமாக விளங்குகிறது. எதுவும் கிடைக்கும். எல்லாம் உலக தர பிராண்ட். ஆனால் எட்டாத விலை.

இந்த பிராண்ட் எல்லாம் நம்ம ஊர் மால்களில் ஷோரூம் நிறுவி சிக்கன விலையில் விற்பனை செய்கின்றனர்.

இந்த பிக்காட்லி சர்க்கிளில் அதிக வாகன நெரிசலை சமாளிக்க இரட்டை மாடிபஸ் அறிமுகம் செய்யப்பட்டு நெரிசல் குறைப்பட்டது.

பக்கிங்காம் அரண்மனை   

பிரிட்டிஷ் ராணி எலிசபெத் மற்றும் அரச குடும்பத்தினர் வசிக்கும் இடம் பக்கிங்காம் அரண்மனை ஆகும்.

இங்கு மேலே பிரிட்டிஸ் கொடி மேலே பறந்தால், ராணி அரண்மனையில் இருக்கிறார் என்று அர்த்தம். மஞ்சள், கலர் கொடி பறந்தால் வெளியே சென்றுள்ளார் என்றும் அர்த்தம்.

பக்கிங்காம் அரண்மனையில் காவலர்கள் அணிவகுப்பு, பொறுப்பு மாற்றுவது பார்க்க பார்வையாளர் கூட்டம் அலை மோதுகிறது.

மாலையில் மெழுகு சிலை கண்காட்சியை பார்வையிட சென்றோம். ‘மேடம் டுசார்ட்ஸ்’ முன்னதாக எஸ்.ஓ.டி.சி குரூப் டிக்கெட் பதிவு செய்ததால், சிறப்பு வரிசையில் விரைவாக உள்ளே சென்றோம். பல்வேறு பிரபலங்களின் மெழுகு சிலைகள் தத்ரூபமாக இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

ஒவ்வொரு சிலையுடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்தவர்கள் அதிகம். எதுவும் வாங்காதீர்கள் எல்லாம் காஸ்ட்லி. வந்த ஞாபகத்திற்கு அந்த பகுதி அடையாள காந்த ஸ்டிக்கர்கள் மட்டும் வாங்குங்கள் எனது மகன், மகள், மருமகள் அட்வைஸ் பொருத்தமாக இருந்தது.

நம்ம நாட்டு பிரதமர் மோடி, சினிமா பிரபலம் ஐஸ்வர்யாராய், அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், கரீனா கபூர், சல்மான்கான் மெழுகு பொம்மைகள் இந்தியர்களை கவர்ந்தன.   பேட்மேன், சூப்பர்மேன், ஹல்க், அமெரிக்க வாரியர் போன்ற கார்ட்டூன் கேரக்டர்களுடன் படம் எடுத்துக் கொண்டோம்.

இங்கிலாந்து உருவான வரலாறு ஆட்டோ போல வாகனத்தில் நம்மை உட்கார வைத்து, கதை ‘3 டி’ முறையில் செயல்பாடுகளுடன் காட்டுவது கண்கொள்ளாக் காட்சி.
இங்கு 7 டி பிரமாண்ட தியேட்டர் உள்ளது. படத்தில் மழை பெய்தால் இங்கும் நீர் தௌிக்கிறது. புகை எபெக்டும் ஏற்படுகிறது.

லண்டனில் 3வது நாளில் ‘லண்டன் ஐ’ என்னும் உலகின் மிக உயர ராட்டினம். ராட்டினத்தின் ஒவ்வொரு டியூபிலும் 10 பேர் நிற்கலாம். உயரத்தில் போய் லண்டனில் சுற்றுலா தலங்களை பார்வையிடலாம்.   

தேம்ஸ் நதி படகு சவாரி, லண்டன் பிரிட்ஜ், உலகின் மிக உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்க்கலாம்.   பக்கிங்காம் அரண்மனை பிரிட்டிஷ் ராணியின் லண்டன் அரண்மனையாகும். லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் இது உள்ளது. ராணியின் முக்கிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவது வழக்கம். இந்த அரண்மனை காவலர்கள் வித்தியாசமான உயரமான தொப்பி அணிந்து காவல் காப்பது வித்தியாசமாக இருக்கும். பகலில் இந்த காவலர்கள் பணி மாற்றம் செய்வதைப் பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும், அனைத்து காவலர்களும் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி. வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரும், இந்திய ராணுவ வீரரும் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை நினைவூட்டியது.

1703 ம் ஆண்டில் பக்கிங்காம் பிரபு இந்த அரண்மனையை கட்டினார். அவரது இடமாக இருந்தது. 3ம் ஜார்ஜ் மன்னர் ராணியின் அரண்மனையாக மாற்றப்பட்டது. அதை 19ம் நூற்றாண்டில் பிரமாண்ட அரண்மனையாக மாற்றப்பட்டது. 1837ம் ஆண்டு முதல் விக்டோரியா மகாராணி இதில் தங்கத் துவங்கினார்.

இந்த அரண்மனையில் 775 அறைகள் உள்ளது. லண்டனில் மிகப் பெரிய தோட்டம் இங்கு தான் உள்ளது.   பக்கிங்காம் அரண்மனையில் முன் முகப்பில் ஒரு பால்கனி உள்ளது. இதிலிருந்து தான் ராணி மக்களுக்கு காட்சி அளிப்பார்.

அடுத்து லண்டன் டவர் என்னும் பழைய ராணி அரண்மனை, முதலில் ஜெயிலாகவும், பிறகு அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது.

இங்கு தான் முந்தைய பிரிட்டிஷ் ராஜா, ராணிகளின் கிரீடம், கத்திகள், தங்க, வைர விலைமதிக்க முடியாத அணிகலன்கள் மற்றும் சிகரமாக கோகினூர் வைரம் உள்ள கிரீடம் போன்றவற்றை பார்வையிடலாம்.

இந்த கோகினூர் வைரம், இந்தியாவுக்கு ஜார்ஜ் மன்னர் வந்த போது, இந்த கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை ராஜாவுக்கு பரிசளித்தார்களாம்.

அடுத்த ஆக்ஸ்போர்டு தெரு, ஷாப்பிங் ஏரியா தான். மறுபடியும் எல்லாம் காஸ்ட்லி.