யூ டியூப்பில் 1 கோடி பேர் ரசித்த “மவுனம் சொல்லும் வார்த்தைகள்”

“பேசாமல் பேசாமல் பேசாமல்

உந்தன் மவுனம்

எந்த நெஞ்சில் ஏன்

காதல் வலையை வீசி செல்கிறதே”…..

தமிழ் ரொமான்டிக் இசை ஆல்பமான, “மவுனம் சொல்லும் வார்த்தைகள்”, தற்போது யூ டியூப்பில், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதயம் வருடும் இந்த இசை ஆல்பத்தை, தற்போது வரை, 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

இசை ஆல்ப வரலாற்றில், புதிய சாதனை படைத்து உள்ள, “மவுனம் சொல்லும் வார்த்தைகள்”, பர்ஸ்ட் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஒளிப்பதிவு லியூக் ஜோஸ். ஜெயக்குமார்.என் எழுதிய பாடல்களை, சித்தார்த்தா ப்ரதீப் இசையில், அமிர்தா ஜெயக்குமார், நிதின் ராஜ் ஆகியோர், தங்களது வசீகர குரலால் உயிரூட்டி உள்ளனர்.

ராகுல் ராஜி நாயர் இயக்கத்தில், வினிதா கோஷி, அபிமன்யு ராமநந்தன், ரஞ்சித் சேகர் நாயர், சுஜித் வாரியார் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஆல்பம், மொழிகள் கடந்து, இளசுகளின் ரிங்டோனாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 9ஆம் தேதி, யூ டியூப்பில் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டது.

கீபோர்டு, கிட்டார், வயலின் கருவிகளின் இசை, இதயைத்தை தாலாட்ட, “மவுனம் சொல்லும் வார்த்தைகள்” அபாரம்!!!