ராதா மோகன் இயக்கம்: ஜோதிகாவின் ‘‘காற்றின் மொழி’’ ஷூட்டிங் துவங்கியது

பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிவிடி தயாரிப்பில், ராதா மோகன் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகும் ‘‘காற்றின் மொழி’’திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியத.

மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘‘மொழி’’. யைத் தொடர்ந்து 10 வருடத்திற்கு பின்னர் ஜோதிகா, இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் இதில் இணைகிறது.ஜி. தனஞ்ஜெயன் , எஸ். விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகிறது.

இப்படத்தின் பூஜை படப்பிடிப்பை மங்களகரமாக இன்று துவக்கினர். நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு வாழ்த்தினார். படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து நடிக்கிறார்கள். இசை ஏ.எச். காஷீப், பாடல் மதன் கார்க்கி, கேமரா மகேஷ் முத்துசாமி, கலை கதிர், உடை பூர்ணிமா, எடிட்டர் பிரவீன் கேஎல், வசனம் பொன் பார்த்திபன், மக்கள் தொடர்பு ஜான்சன்..

இந்த ஆண்டு அக்டோபர் மாதம்வெளியீடு.