மனக் கட்டுப்பாடு (துரை.சக்திவேல் )

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் சோமசுந்தரம். அவர் தனது ஒரே மகன் முத்துவை என்ஜினீயரிங் படிக்க வைத்தார்.
முத்துவும் நன்றாக படித்து சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான்.
அவனுக்கும் சென்னையில் உள்ள ஒரு அரசு வங்கியில் வேலை பார்க்கும் கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றுது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.
முத்து சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தான்.
சென்னையில் இருக்கும் தனது மகன் முத்து, மருமகள் மற்றும் பேர குழந்தைகளை பார்க்க கிராமத்திலிருந்து சோமசுந்தரம் வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த அவரை மருமகள் கல்யாணி வாங்க மாமா வாங்க நல்லா இருக்கேங்களா, அத்தையையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே என்று கேட்டார்.
இல்லம்மா… அவளை பஸ்சில் அழைத்து வர முடியாது அதுதான் நான் மட்டும் உங்களை ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.
பேரன், பேத்திகளுக்கு பள்ளிக்கூடம் விடுமுறை. அவங்கள கிராமத்துக்கு கூட்டிட்டு வான்னு சொன்னா,
என் பசங்க கிராமத்தில் வந்து இருப்பது ரொம்ப கஷ்டம். அதனால நீங்க சென்னைக்கு வாங்கன்னு என் பையன் சொல்லிட்டான்.
அந்த காலத்தில் பள்ளிக்கூட விடுமுறைன்னா… குழந்தைகள் தாத்தா… பாட்டி வீட்டுக்கு போவங்க.
கிராமத்தில் குளக்கரையிலும் தென்னந்தோப்புகளிலும் வயல் வெளியிலும் நல்லா விளையாடுவாங்க.
இந்த காலத்து குழந்தைகள் எல்லாம் கிராமத்து பக்கமே வர பயப்படுறாங்க.
அவங்க வர நினைச்சாலும் அவங்க பெற்றோர்கள் கூட்டிட்டு வர பயப்படுறாங்க.
இவங்க வளர்ந்து அங்கதான்னு மறந்துட்டாங்க.
அதனால் தான் நம்ம போய் பேரப்பிள்ளைகளை பார்க்கலாம்னு வந்தேன்.
எங்க என் பேரப் பிள்ளைகளை காணோம்.
உள்ள ரூம்மில் இருக்காங்க மாமா, இந்தா வரச் சொல்றேன் என்று கூறிய கல்யாணி படுக்கை அறைக்குள் சென்று, அங்கிருந்த தனது மகன் கோபியையும் மகள் ஷேபனாவையும் அழைத்து வந்தார்.
கோபி கையில் செல்போனுடனும் ஷோபனா காதில் ஹெட் போனை மாட்டியபடி வந்தனர்.
தாத்தாவை பார்த்த குழந்தைகள் ஹலோ தாத்தா என்ற கூறியபடி நின்றனர்.
அதை பார்த்த சோமசுந்தரத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
பேரக் குழந்தைகள் தாத்தாவை பார்த்தவுடன், வேகமாக ஓடிவந்து தாத்தாவை கட்டி அணைத்து கொஞ்சவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் சோமசுந்தரம் வந்தார்.
ஆனால் அவரது பேரப் பிள்ளைகள் தாத்தாவை பார்த்து ஹலோ தாத்தா என்று கூறிவிட்டு தங்கள் கையிலிருந்த செல்போனை பார்க்க தொடங்கி விட்டனர்.
உடனே சோமசுந்தரம் அந்த பிள்ளைகள் அருகில் சென்று, அந்த பிள்களை கட்டி அணைத்து தனக்கே உரிய பாணியில் கொஞ்சி மகிழ்ந்தார்.
அந்த பிள்ளைகளை தனது அருகில் அமர வைத்து பல்வேறு கேள்விகளை அந்த குழந்தைகளிடம் கேட்டார்.
அந்த குழந்தைகளோ ஒரே வார்த்தையில் அவருக்கு பதில் கூறினார்கள்.
சோமசுந்தரம் அந்த குழந்தைகளின் கையில் இருந்த செல்போனை பார்த்தால் பேரன் கோபி செல்போனில் விளைாயடிக் கொண்டிருந்தான். பேத்தி ஷோபனா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முத்து, அப்பா… வாங்க… அம்மா எப்படி இருக்காங்க என்று நலம் விசாரித்தார்.
என்ன உங்க பேரப் பிள்ளைகள் என்ன சொல்லுறாங்க என்றான்.
அட போடா… நான் ஆசை… ஆசையா… பேரப் பிள்ளைகளை பார்க்கா வந்தா, அந்த பிள்ளைகள் என்னடானா… செல்போனில் விளையாடிக்கிட்டு இருக்காங்க.
அப்பா இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் அப்படிதான் என்று கூறிய முத்து, தன் தந்தையை குளிக்க அழைத்து சென்றார்.
சோமசுந்தரம் குளித்து முடித்து மீண்டும் வந்து காலை உணவை சாப்பிட்டார்.
சோமசுந்தரத்திற்கு வீட்டுக்குள் இருக்க முடியவில்லை. அதானல் வெளியே செல்லலாம் என்று தனது பேரக் குழந்தைகளை அழைத்தார்.
அந்த பிள்ளைகள் வெளியே வெயில் அதிகமாக இருக்கும் தாத்தா, நாங்க வரலை. நீங்க போயிட்டு வாங்க என்று கூறி வீட்டுக்குள் ஏ.சி.யை ஆன் செய்து கையில் லேஷ் பாக்கெட்டை வைத்து அதை ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டு டி.வி. பார்க்கத் தொடங்கினர்.
சோமசுந்தரம் மட்டும் சிறிது நேரம் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தார்.
மாலை நேரம் வந்தது. அந்த குழந்தைகள் சிறிது நேரம் தாத்தாவுடன் பேசினர். மீதி நேரம் முழுவதும் செல்போனில் விளையாடுவதும், காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பதுமாக இருந்தனர்.
இரவு முத்து, தனது தந்தை சோமசுந்தரம் மற்றும் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ஓட்டலுக்கு சென்றான்.
அங்கு சென்றவுடன் முத்து தனது தந்தைக்கு சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டான்.
சோமசுந்தரம் தனதுக்கு இட்லி மட்டும் போதும் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து அந்த குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை கேட்டு வாங்கினர்.
ஓட்டல் ஊழியர் அனைவருக்கும் உணவை எடுத்து வந்தார்.
அந்த குழந்தைகள் நூடூல்ஸ், பர்க்கர், பீசா போன்றவற்றை வாங்கி சாப்பிட்டனர்.
உடனே சோமசுந்தரம் தனது மகன் முத்துவிடம் ஏனப்பா இந்த மாதிரி கண்ட கண்ட உணவை வாங்கிக் கொடுத்து பிள்ளைகளின் உடம்பை கெடுக்கிற என்று கேட்டார்.
அப்பா… இந்த காலத்து பசங்க நம்ம சொல்றது கேட்கமாட்டாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப்
பார்த்தேன் .கேட்கலை. அதனால அவங்க இஷ்டத்துக்கு விட்டுட்டேன் என்று கூறினார்.
சோமசுந்தரத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
அவர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர்.
மறு நாள் காலை சோமசுந்தரம் தனது மகன் முத்து மற்றும் மருமகள் கல்யாணியை அழைத்தார்.
உன் பசங்க எந்த நேரமும் செல்போனை பார்த்துகிட்டே இருக்காங்க. இதனால் அவர்களுக்கு விரைவில் கண் பாதிப்பு ஏற்படும்.
அது மட்டுமல்லாமல் எந்த நேரமும் காதில் ஹெட்மோனை மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுக்கிட்டே இருந்தா காது என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியாதா?
இந்தச் சின்ன வயதில் பிள்ளைகளை வெளியில் விளையாட விடனும். நீங்க என்னடானா பிள்ளைகளை வீட்டுக்குள்ளே வைத்து அவங்களோட மகிழ்ச்சியை நீங்களே கெடுத்துட்டேங்க. வீட்டுக்குள்ள ஏ.சி. அறையிலே அவங்க இருந்தா அவங்க உடலில் எந்த எதிர்ப்பு சக்தியும் இல்லாம போயிடும். இதனால் அவங்களுக்கு அடிக்குடி நோய் ஏற்ட வாய்ப்பு உண்டு.
சாப்பாடு. இந்த விஷயத்தில் பெத்தவங்களை தான் முதலில் கண்டிக்கனும். ஏன் என்றால் நீங்க தான் அந்த குழந்தைகளுக்கு லேஷ், குர்க்கறேஎன்னு கண்ட கண்ட தின் பண்டங்களை வாங்கி கொடுக்கிறீங்க. அதுமட்டுமல்லாமல் நூடூஸ்ல், பீசா, பர்க்கர்ன்னு வாங்க கொடுத்து நம்ம நாட்டு உணவு பழக்கத்தை மாற்றியமைக்க ஆரம்பிச்சுட்டீங்க.
பெற்றவர்கள் நீங்க செய்த பிழையால் குழந்தைகள் தங்களோட ஆசைகளை கட்டுப்படுத்த முடியாம அவங்க இஷ்டத்து நடக்க தொடங்கிட்டாங்க.
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களையும் மனிதன் பாதுகாக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லைன்னா நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியாது என்று அறிவுரை கூறினார்.
இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்த சோமசுந்தரம் மூன்றாவது நாள் தனது ஊருக்கு கிளம்ப தாயராகிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது பேரன் கோபிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.
உடனே முத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
டாக்டர்கள் கோபியின் உடலை பரிசோதனை செய்து பார்த்து உடனே ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. கை, கால்கள் ஓடவில்லை. என்ன செய்யவதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓட தொடங்கினான்.
சோமசுந்தரமும் அவனுக்கு உறுதுணையாக இருந்தார்.
ரத்த பரிசோனை ரிப்போர்ட் வந்தது.
அதனை பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கோபியின் ரத்ததில் இருக்கும் வெள்ளை அணுக்களும் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட மிக அதிக அளவில் மாறுப்பட்டன.
உடனே அவனை ஐ.சி.யூ.வில் சேர்த்து அவனுக்கு தொடர்ந்து சிக்சிசை அளிக்க தொடங்கினர்.
கோபியின் உணவு பழக்க முறையை டாக்டர்கள் கேட்டனர்.
முத்து தனது மகன் அதிகமாக லேஷ் போன்ற திண்பண்டங்களையும் பீசா, பர்க்கர், நூடூல்ஸ் போன் உணவுகளையும் அதிக அளவில் சாப்பிடுவதையும் கூறினார்.
மேலும் எந்த நேரமும் செல்போனில் விளையாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தான் என்பதை சோமசுந்தரம் கூறினார்.
மருத்துவர்கள் முத்துவை கண்டித்தனர். அவனது உணவு பழக்கவழக்கத்தினால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டது. மேலும் அவன் செல்போனில் படம் பார்ப்பது, பாட்டு கேட்பதால் அவன் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று டாக்டர்கள் கூறினர்.
முத்துவுக்கு தனது தந்தை சோமசுந்தரம் கூறிய அறிவுரைதான் ஞாபகத்திற்கு வந்தது. இனி மேல் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்… என் மகனை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று முத்து டாக்டர்களிடம் கெஞ்சினான்.
டாக்டர்கள் கோபி விரைவில் குணாமாவான் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தி வாழ்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் நலமுடன் வாழலாம்.