75வது பிறந்தநாள்: இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

புதுடெல்லி , ஜூன். 2–

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இன்று 75 வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் மூலம் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கிய போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜனாதிபதி, ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் என 3 மொழிகளிலும் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

‘‘இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.