தந்திர வலை

  • டாக்டர் கலைவாணி

 

“என்ன இது கண்றாவி? ச்ச, ச்ச, கொஞ்சங்கூட இங்கிதம் இல்லாமல் . இந்தகாலம் இப்படி கெட்டு போச்சே! ஒரே ஆபாசமும் ஆட்டமும் கூத்தும் என்ன இது?”

பொறுமித் தள்ளினாள் கலா,

“அந்த நாளில் வெறும் “ஒலியும் ஔளியும், வெள்ளிக்கிழமையன்னிக்கு போடுவா. ரொம்ப கேளிக்கைகள் கிடையாது. குடும்பத்தோட உக்காந்து பார்ப்போம். இதுவும் யார் வீட்டிலேயும் டிவியும் இருக்காது. முண்டியடிச்சு, யாராவது சிநேகிதர் வீட்டில் பார்ப்போம்” என அங்கலாய்க்க,

“அம்மா… போதும்மா. வி ஆர் டிரையிங். சீக்கிரம் டிபன் கொண்டு வா. பாடல்கள் அலற போன் மூலைக்கு மூலை இரண்டு பெண்களின் கைப்பையிலிருந்தும் அலற….”

“ஏண்டி ஒரே சத்தம். அடங்க மாட்டீங்களா?”

என கலா விரட்ட

“அம்ம, அதெல்லாம் உங்ககாலம் என்று அவளின் மூத்தவள் ப்ரியா சின்ன மினி ஸ்கர்டில் வந்து உதயமானாள். இளையவள் “பிரேமினி” சிறிய ஷார்ட்ஸ் மட்டும் போட்டிருந்தாள்.

பளிச்சென்ற அழகில், மினி சினி ஸ்டாராய் எடுப்பாய் பிரகாசித்தனர்.

“அம்மா எனக்கு Whats Hapல ஒரு Event வந்திருக்கு தோ….”

அவள் அனிச்சை செயலில், பஞ்சுபோன்ற ஆள் காட்டி விரலால், மென்மையாக தள்ள

“ஒரு பெண்ணின் புடவை விலகி தூங்கிக் கொண்டிருப்பதை, பெண்களின் இயல்பான வேலை செய்யும் மும்முரமான தோற்றத்தில் குனிந்து வேலை செய்தாலில் விளக்கேற்றும் நேரம், புகைப்படங்களின் இழிவான காட்சிகளை அனுப்பி இருந்தனர்.

“ஏண்டி, என்னடி இது? படிக்கறவாளுக்கு இத்தனை சிநேகித கூட்டம்? என்னென்ன கண்றாவியோ அனுப்பறாளே? இதெல்லாம் கசிக்கலையே. பேசாம நீங்க வெறும் சாதாரன மொபைல் வச்சுக்கோங்களேன்.

“அம்மா எங்களை யாருமே மதிக்கமாட்டா, அப்புறம்.”

கலாவிற்கு மிகவும் மனம் நெருடலாய் இருந்தது.

“இந்த ஸ்மார்ட் போன், எதுக்காக படிக்கிற குழந்தைகள் காலேஜக்கு எடுத்துண்டு போறா?

புலம்பினான் இந்த மொபைல் போதையில் கீழ. அடிமையாக இருக்கும் இனறைய உலகம் எங்கு போகுமோ? புலம்பி தவித்தாள். அன்று மாலை ப்ரியாவும் பிரேமினியும் அவர்கள் சிநேகிதிகள் பட்டாளத்தையே வீட்டிற்கு கூட்டி வந்தார்கள்.

கமலா, ராதா, ரஞ்சிதா என்று பத்து பெண்களோடு வீட்டிற்கு வர, வீட்டில் ஒரே பாட்டும் அவர்களின் நடனமும்,

“ஏண்டி அப்பா மும்பாய் போனதிலிருந்து உங்களை ஏன்ன கேக்க முடியலை?

என கலா அதிர

“அம்மா எங்க டான்ஸ், வாட்ஸ் ஆப்ல வந்திருக்கு சும்மா பயிற்சி பண்ண. இவங்களை கூப்பிட்டேன்.

“சரி மாமி நாங்க வரோம். வந்த பெண்கள் கிடு கிடுவென சொல்லிட்டு மறைந்தார்கள்.

வீடு முழுக்க ஒரே சிப்ஸ் பாக்கெட்டும் பிறு்கெட் பாக்கெட்டும், அங்கங்கு குடித்து விட்டுப் போட்ட மில்க் அட்டை பெட்டிகளும், கலாவிற்கு வீட்டை, வீடாய் ஆக்க இரண்டு மணி நேரமானது.

“அம்மா இங்க வாயேன் இங்க வந்து பாரேன்” பிரியா அலறினாள்.

பாருடி நம்ம டான்ஸ் ஷோ ல எடுத்திருக்காங்க. வாட்ஸ் ஆப்ல அவள் பின் பகுதியை ஆட்டத்தின் மும்முரத்தில் பின்னால் இருந்த ஒரு பையன் பிடித்து அழுத்துவதும் வெறும் தற்செயலாக நடந்த அந்த அருவெருப்பான நிகழ்வை மீண்டும். மீண்டும் மூன்று முறை நிகழ்வதாய் பதிவு செய்தும், அந்த காட்யை அனுப்பி இருக்கு.

“என்னடி கேவலம் இது? இந்த மாதிரிபேன்சி ஷோ ல போய், ஒரு பெரிய மால் ல நீங்க நடனம் ஆடினதால, எத்தனை கேவலம்? அப்பாக்கு தெரிஞ்சா வெட்டி போட்டுருவார்.

“அம்மா, நாங்க தப்பு பண்ணிட்டோம். இப்படி வக்ரத்தோட இதை அனுப்பிருக்காளே! அப்பவே அவனிடம் நான் வெறுப்பை காட்டினேன். ஆனா இதை எப்படிம்மா, எடுத்தா? “

ஆமாண்டி, நம்ம வேதனை நமக்கு மட்டும் தாண்டி வேதனை. மத்தவாளுக்கு இது வேடிக்கை மட்டுமே.

என்னதான் இது மொபைல் காலமாகட்டுமே பெண்குழந்தைங்க அடக்க ஓடுக்கமாத்தான் இருக்கணும்., அறிவியல் வளர்ச்சி, ஆபாச உலகத்திற்கும் காமுகர்களுக்கும் ஒரு பெரிய தந்திர வலைதான் இந்த வலைதள இணைப்பெல்லாம் காமுகர்களின் சொர்க்க வலையாயிருத்து அம்மா சொல்வதில் அர்த்தம் இருந்தது.

“ஸ்மார்ட் போன் ” இணைப்புகளை முதலில் துண்டிக்கவேண்டும். ” மனதினுள் தீர்மானத்தில் வெளிச்சம் பிறந்தது. பிரேமினி தீர்மானித்தாள்.

“ப்ரியா இனிமே நம்ம அம்மா சொல்றா மாதிரி, டான்ஸ் ஷோஸ் எல்லாம் அவாய்டு பண்ணணும்,

” கட்டாயமா நேக்கு ரொம்ப வேதனையா இருக்குடி. நம்மளை சுத்தி வெறும் காமுகர்கள் தாண்டி இருக்கா. அம்மா சொல்றா மாறி, யாருமே சொல்ல மாட்டாடி” பிரேமினியும் பிரியாவும் அம்மாவை கட்டிக் கொண்டார்கள்.