21வது ஷாங்காய் பட விழவில் இயக்குனர் ராமின் ‘பேரன்பு’!

47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘‘பேரன்பு’’திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் ‘‘பேரன்பு’’ முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் நெட்பேக் விருதிற்கு போட்டிப் பிரிவில் தேர்வாகியது.

தற்போது பேரன்பு திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஆக சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக ‘‘பேரன்பு’’திரையிடப்பட இருக்கிறது என்று தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், இயக்குனர் ராம் தெரிவித்தனர். இசை யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு: சூர்ய பிரதமன், கலை: குமுார் கங்கப்பன்.

நடிகர்கள்: ‘மெகா ஸ்டார்’ மம்முட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் மற்றும் பலர்.