மண்ணுக்கு 6 அடி கீழே புதையுண்டு தவிக்கும் இளைஞனின் மரண பீதி

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘‘ஆண்டனி’’. இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகர், மூத்த நடிகை ஜெயசித்ரா கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.

சண்டக்கோழி புகழ் “லால் ” நிஷாந்த், வைசாலி, நடிகை ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் – பாலாஜி. நாயகன்: நிஷாந்த்.

ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல், பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டுள்ளது.

உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த். பூமிக்கு அடியில் 6 அடி புதை குழியில் சிக்கித் தவிக்கும் இளைஞனின் ஜீவ மரணப் போராட்டம் தான் கதை’ என்றார் இயக்குனர் குட்டி குமார்.