பர்மா பஜார் பின்னணியில் ‘சைனா’

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பிரபலமானவர் கலையரசன். அடுத்து ‘டார்லிங்–2’, ராஜா மந்திரி, ஆகிய படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. குறிப்பாக கலையரசன் ஹீரோவாக நடித்த ராஜா மந்திரி படம் வசூல் ரீதியில் தோல்வியடைந்ததால் ‘அப்செட்’டில் இருந்த கலையரசனுக்கு தற்போதைய ஆறுதல் ரஜினியின் கபாலி படம் தான்.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சைனா’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்த ஹர்ஷவர்தனா இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஜி. விஜயம் என்பவரின் பேரன் ஆவார்.

சென்னை பர்மா பஜார் பின்னணியில் எடுக்கும் ‘சைனா’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். ‘சூது கவ்வும்’ படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த யோக் ஜேபி, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்த டேனியல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘மதுபானக்கடை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த வேத் சங்கர் இசையமைத்திருக்கிறார். சைனா படத்தின் வெற்றியில் தான் இருக்கிறது கலையரசனின் ஹீரோ கனவு. இப்படம் ஓடவில்லை என்றால் கலையரசன் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா டூயட் பாடி ஆடியுள்ளார். வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.