‘குப்பைக் கதை’க்கு சிவகார்த்திகேயன் புகழாரம்

‘குப்பைக் கதை’ இது காளிரங்கசாமி இயக்கும் படம். நாயகன் மாஸ்டர் டான்ஸ் தினேஷ் பேசும்போது, நான் நடிகனாவேன், அது என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க.. என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்தேன். அவள் ‘ஓகே’ சொன்னதும் தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கதை, ஒரு மாதிரியான கதைதான்.. டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன்” என்றார்.​  

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘ விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்.. ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும்’ என்றார்.

* விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அந்த கதாநாயகனாக அதினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். குப்டபயில் தான் என்னென்ன கிடக்கின்றன..? குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

* நடிகர் ஆர்யா பேசும்போது, “என்னை மாதிரி ஆட்களுக்கு தினேஷ் மாஸ்டர் தான் வசதி.. எனக்கு ரிகர்சல் கொடுத்து ஆடச்சொல்வார்.. அப்படியும் செட்டாகலைன்னா, அவரோட குரூப்ல இருக்குறவங்களை கூப்பிட்டு, ஆர்யா எப்படி ஆடுறாரோ அதை நீங்க பாலோ பண்ணிக்குங்கன்னு சிம்பிளா வேலையை முடிச்சுடுவார் என்றார்.

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். கதாநாயகி; வழக்கு எண் 18 புகழ் மனிஷா. இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார்.

25ம் தேதி இந்தப்படம் ரிலீஸ். இதன் இசைவெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குனர் (அமீர்) பாண்டிராஜ், எழில், பொன்ராம் ஆகியோர் பேசினார்கள்.