13 எம்.பி. கேமராவுடன் அதிக நினைவாற்றல் கொண்ட ‘இம்பல்ஸ்’ செல்போன் ‘கல்ட்’ நிறுவனம் அறிமுகம்

சென்னை, மே. 16–

‘கல்ட்’ நிறுவனம் ரூ.9 ஆயிரம் விலையில், 13 எம்.பி. பின் கேமரா, 13 எம்.பி. செல்பி கேமராவுடன் ‘இம்பல்ஸ்’ என்ற நவீனரக ஸ்மாட்போனை அறிமுகம் செய்துள்ளது என்று நிறுவனத்தின் இயக்குநர் (புதிய தயாரிப்புகள் மேம்பாடு) நிதேஷ் குப்தா தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘இம்பல்ஸ்’ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு தளத்தில் செயல்படக்கூடியது. 5.99 அங்குல ஹெச்.டி. திரை, 3ஜி.பி. ராம், 32ஜி.பி. உள்நினைவக திறன், 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் புராசஸர், ஆட்டோ போகஸ் 13 எம்.பி. பின்பக்க கேமரா, 13 எம்.பி. முன்பக்க கேமரா, பிங்கர்பிரின்ட் சென்ஸார் உள்ளிட்ட அம்சங்கள் இப்புதிய ரக ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. இதில், பொருத்தப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த பேட்டரி நீடித்து உழைக்கக்கூடியது. முகவடிவமைப்பை அங்கீகாரமாக வைத்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.9 ஆயிரமாகும்.

புதுமை, எளிமை, உத்வேகத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இப்புதிய ரக ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை அளித்திடும் வகையில் நாடு முழுவதும் 750-க்கும் மேற்பட்ட மையங்களை அமைத்துள்ளோம்.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ரூ.2,200 கேஷ் பேக் சலுகையுடனும் (குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களின் அடிப்படையில்) விற்பனைக்கு வந்துள்ளது,” என்று தெரிவித்தார்.