பிரேசில் அணியில் நெய்மருக்கு இடம்

உலகக் கோப்பைக்கான பிரேசில் அணியில் நெய்மருக்கு இடம் பிடித்தார்.

காலில் ஆபரேசன் செய்ததால் மூன்று மாதங்களாக விளையாடாமல் இருந்தவர்.

பிரேசில் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற லீக் போட்டியின்போது நெய்மருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆபரேசன் செய்து கொண்டார். இதனால் கடந்த மூன்று மாதங்களாக விளையாடாமல் இருந்தார். தற்போதுதான் பாரிஸ் சென்று பிஎஸ்ஜி அணியுடன் இணைந்துள்ளார். இந்நிலையில் ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான பிரேசில் அணியில் நெய்மர் இடம் பிடித்துள்ளார்.