நெருப்பு பற்றி அரிதான அறிவியல் தகவல்கள்!

ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பு நம் வாழ்வில் இன்றியமையாதது. உலகம் நிலைத்திருப்பதற்கான முக்கியக் காரணமே நெருப்புதான். ஆம், சூரியன்தான் பூமிக்கருகில் இருக்கும் மிகப்பெரிய நெருப்புக் கோளம். நெருப்பில்லாமல் நம் செயல்கள் எதுவுமே கிடையாது.
நெருப்பைப் பற்றிய சில தகவல்கள்:
* மெழுகுவர்த்தியில் எரியும் சுடரின் வெப்ப நிலை 1000 டிகிரி செல்சியஸ். அதாவது, 1800 ஃபாரன்ஹீட்!
* நெருப்பு என்பது ஒரு பொருள் அல்ல. ஒரு செயல்பாடு; ஒரு வேதியியல் எதிர்வினை.
* மரக்கட்டை அல்லது வேறேதேனும் பொருட்களின் வெப்பநிலை அதிகரித்து, அதோடு ஆக்ஸிஜன் சேர்கையில் நெருப்பு உண்டாகிறது.
* நெருப்பு எரியக்கூடிய ஒரே கோள், பூமி. காரணம், வேறு எங்கும் பிராணவாயு கிடையாது.
* ஆக்ஸிஜனின் அளவைப் பொறுத்து நெருப்பின் நிறம் மாறுபடுகிறது. குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருந்தால், மஞ்சள் நிறமாகவும், அதிகளவு ஆக்ஸிஜன் இருந்தால் நீல நிறமாகவும் நெருப்பு இருக்கிறது.
* காட்டுத் தீ ஏற்படுகையில், மரத்தினுள் இருக்கும் நீர், அதிக அளவு வெப்பத்தில் ஆவியாகிறது. அதனால்தான், மரம் வெடிக்கிறது!
* தீ அணைப்பு பொருளைக் (fire hydrant) கண்டுபிடித்தது யாரென்று தெரியவில்லை. காரணம், அதன் காப்புரிமை 1836ஆம் ஆண்டில் ஒரு நெருப்பில் எரிந்துவிட்டதாம்!
* இராக் நாட்டில், ஒரு இடத்தில் 4,000 ஆண்டுகளாக தொடர்ந்து நெருப்பு எரிந்துகொண்டிருக்கிறது! அதன் பெயர் ‘பாபா குர்குர்’. (அணையா நெருப்பு; The Eternal Fire)
* நெருப்பு அதி வேகமானது. 30 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவிவிடும்!
* நெருப்பால் எரிந்து மரணம் நிகழ்வதைவிட, அதிலிருந்து வரும் புகை காரணமாகத்தான் பலரும் மரணித்து விடுகின்றனர். ஒரு அறையில் இருக்கும் அனைத்து ஆக்ஸிஜனையும் நெருப்பு எடுத்துக்கொண்டு, அதிகளவிலான விஷ வாயுவை வெளியிடுவதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து போகின்றனர்.
டிக்டாம்னஸ் அல்பஸ் (Dictamnus Albus) என்ற செடியிலிருந்து வெளியாகும் எண்ணெய் போன்ற திரவத்தை, பற்ற வைக்க முடியும். இதில் சிறப்பு என்னெவென்றால், அந்தச் செடிக்கு நெருப்பால் எந்த பாதிப்பும் கிடையாது, திரவம் மட்டுமே எரியும்!