நெஞ்சத்தில் நீங்காத துன்பம்

இதமான தென்றல் காற்று வீசும் மாலை பொழுது, சூரியன் மறைந்து வெண்ணிலா மெல்ல மெல்ல தெரியும் நேரம். வானத்தில் முளைக்கும் வண்ண வண்ண நட்சத்திரங்களை பார்த்தவாறு வீட்டு வாசலில் திறந்த வெளியில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் மேனகா.
வீட்டு வாசலில் உள்ள இரும்பு கேட்டை தட்டிக் கொண்டு நிற்கும் கவிதா, ‘‘ மேனகா.. மேனகா…’’ என்று அழைக்கிறாள்.
அவள் அழைக்கும் சத்தம் கூட காதில் விழுதா அளவுக்கு மேனகாவின் எண்ணம் சிதறி இருந்தது.
ஒரு கட்டத்தில் பொருமை இழந்த கவிதா ஓங்கி கத்தினாள்.
சட்டென்று திடுக்கிட்டு விழித்த மேனகா… மட மடவென்று எழுந்து வந்து இரும்பு கதவை திறந்தார்.
உள்ளே வந்த கவிதா
என்னடி… ஆழ்ந்த சிந்தனையில் இருக்க.
உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்க்கலாம்னு வந்தேன். எப்படி இருக்க.
உங்க வீட்டுக்காரர் வந்துட்டாரா? எப்படி இருக்காருன்னு கேட்டார்.
நல்லா இருக்கேன். அவர் வந்து 3 மாசம் ஆச்சு என்றாள்.
உன் வீட்டுகாரர் தான் வந்துட்டாரே அப்புறம் ஏன்டி சோகமா உட்கார்ந்து இருக்க.
எங்க அவரை காணோம்.
கடைக்கு போயிருக்காரு.
உங்க மாமியார், மாமனரை காணோம்… எங்க போயிருக்காங்க.
அவங்க கோவிலுக்கு போயிருக்காங்க.
சரி ஏன் சோகமா உட்கார்ந்து இருக்க. உங்க வீட்டுக்காரர் தான் ஊரில் இருந்து வந்துட்டாரே என்று கவிதா கேட்டாள்.
மேனகாவும் கவிதாவும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகள்.
மேனகாவுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு ராமுவுடன் திருமணம் முடிந்தது.
ராமு கப்பலில் பணியாற்றுகிறார். அவருக்கு 6 மாதம் கப்பலில் வேலை. மீதி 6 மாதம் விடுமுறையில் வீட்டில் இருப்பார்.
திருமணம் முடிந்து 3 வது மாதத்தில் கப்பல் பணிக்கு திரும்பி சென்ற ராமு தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்து இருந்தார்.
அப்போது கவிதா மேனகாவைப் பார்க்க அவள் வீட்டுக்கு வந்தாள்.
வா கவிதா உள்ளே வா என்று கவிதாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மேனகா, அவளை உட்காரச் சொன்னார்.
கவிதா உட்காரு டீ போட்டு எடுத்திட்டு வறேன் என்று சமையல் அறைக்குள் சென்ற மேனா டீ போட்டு எடுத்து வந்து கவிதாவிடம் கொடுத்தார்.
அதை குடித்த கவிதா… ஏன்டி சர்க்கரையே போடமா கொடுக்கிற என்று மேனகாவிடம் கேட்டார்.
ஐயோ சர்க்கரை போடலையா… சாரி கவிதா, அந்த டீயை கொடு நான் சர்க்கரையை போட்டு எடுத்துட்டு வறேன் என்று வாங்கிக் கொண்டு திரும்ப சர்க்கரை சேர்த்து கொடுத்தாள் மேனகா.
ஏன்டி மேனகா வீட்டு வாசலில் சோகமா உட்கார்ந்து இருந்த… என்னென்னு கேட்டதற்கு ஒண்ணும் இல்லைன்னு சொன்னே.
ஆனா உண்மையிலே நீ சரியான மனநிலையில் இல்லைன்னு நினைக்கிறேன்.
இப்ப என்னடன்னா டீயில் சர்க்கரை போடாம கொடுக்கிற. நீ வேற ஏதோ கவலையில் இருக்கிற மாதிரி தெரியுது.
4 மாசத்துக்கு முன்னாடி உங்க வீட்டுக்கு வந்தேன். அப்பவும் நீ சோகமா உட்கார்ந்து இருந்த.
ஏன் சோகமா இருக்கேன்னு கேட்கவே இல்லை.
எனக்கு தெரியும் உன் வீட்டுக்காரர் கல்யாணம் முடிஞ்சு 3 மாசத்திலே உன்னை அவங்க வீட்டில் விட்டுட்டு கப்பல் வேலைக்கு போயிட்டாரு.
கணவனை பிரிந்த எந்த மனைவியும் சந்தோஷமா இருக்க முடியாதுன்னு எனக்கும் தெரியும்.
அதனால் நான் உன்கிட்ட கேட்கவே இல்லை.
உனக்கு ஆறுதல் எதுவும் கூறினாலும் பயனில்லைன்னு உன்னை கடைக்கு கூட்டிட்டு போயி கொஞ்ச நேரம் உன் கவனத்தை திசை திருப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்தினேன்.
இப்ப தான் உன் வீட்டுக்காரர் லீவுக்கு வீட்டுக்கு வந்திருக்காரே.
அப்புறம் ஏன் சோகமா இருக்கே என்று கவிதா கேட்டார்.
அது ஒண்ணும் இல்லடி அவர் இல்லாத போது, அவர் இல்லைன்னு மனசு கவலையா இருக்குது…
அவர் வந்துவுடன் கொஞ்ச நாள் சந்தோஷமாத் தான் இருந்தது.
நாட்கள் போக போக, அவர் மீண்டும் வேலைக்கு கிளம்பிடுவாரேன்னு நினைச்சா எனக்கு நீங்காத துன்பம் உண்டாகிறது.
கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்கு வருத்தமடையவும் அவர் வந்துவிட்டால், அவர் மீண்டும் பிரிந்துவிடுவாரே என்று பயப்படும் என் நெஞ்சம் பெரிய துன்பத்தைப் பெற்றிருக்கிறது என்று கூறினாள்.
மேனகாவின் பரிதாப நிலையை உணர்ந்த கவிதா மனதிற்குள் பரிதாபப்பட்டாலும் அவதை காட்டிக் கொள்ளவில்லை.
அடியே உன் வீட்டுக்காரர் வேலைக்கு தானே போறாரு. அதுவும் 6 மாசதம் தானே.
இதே வெளிநாட்டில் வேலை பார்க்கும் எத்தனை பேர் தங்களை குடும்பத்தை பிரிந்து வருஷ கணக்கில் தனியா கஷ்டப்படுறாங்க. அவங்க குடும்பத்தாரின் நிலையை யோசித்து பாரு.
அவங்களை ஒப்பிடும் போது உன் வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைச்சுக்கோ.
அவர் வேலைக்கு கிளம்பியதும் நீ ஏதாவது வேலைக்கு போ. நீ தான் நல்லா படிச்சுருக்கா. ஏன் வீட்டிலே இருக்க.
நீ வேலைக்கு போக ஆரம்பிச்சேனா கொஞ்சம் மனதுக்கு ஆறுதலா இருக்கும் என்று கவிதா கூறினாள்.
இல்லடி, எங்க வீட்டுக்காரர் வேலைக்கு எங்கும் போக வேண்டாம்னு சொல்லிட்டாரு.
அதே போல் எங்க மாமனாரும் மாமியாரும் ஒத்துக்க மாட்டாங்க என்று மேனகா கூறினார்.
இது குறித்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது மேனகாவின் கணவர் ராமு வீட்டுக்கு வந்தார்.
உடனே கவிதா அவரிடம் நலம் விசாரித்தார்.
அதன் பின்னர் ராமுவிடம் மேனகாவின் உள் மன வேதனை குறித்து விளக்கி கூறி, நீங்கள் வேலைக்கு போகும் நேரத்தில், அவளை எங்காவது வேலைக்கு அனுப்பினால் தான் அவன் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று கூறினார்.
இது குறித்து மனைவி ஏற்கனவே கூறிய போது, அதன் அர்த்தம் புரியாததால் மறுத்த ராமுவுக்கு, கவிதா கூறிய போது மேனகாவின் மனநிலை புரிந்தது.
மனைவியின் மன வேதனையை உணர்ந்த ராமு, இந்த முறை நான் வேலைக்கு போகும் போது ஒரு நல்ல இடத்தில் வேலைக்கு செல்ல நானே ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார்.
அதை கேட்ட மேனகா மகிழ்ச்சி அடைந்தார்.
என்னதான் வேலைக்கு சென்றாலும் கணவனை பிரிந்து வாழும் எந்த ஒரு மனைவியும் நெஞ்சத்தில் நீங்காத துன்பத்துடனே வாழ்த்து வருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிக்கொண்டே கவிதாவும் அவர்களிடமிருந்து விடை பெற்று சென்றாள்.