திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள்

திருப்பூர், மே 16-–

திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின், ஆண்டு விழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு, நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

‘வெண்மை’ என்றாலும், ‘வேட்டி’ என்றாலும் உடனே அனைவரின் நினைவுக்கு வருவது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களின் குடும்பத்திற்கு, வாழ்வாதாரமாக திகழும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம். தனது தரமான தயாரிப்புகள் மூலமாக, மக்கள் மனதில் முதலிடம் பெற்றுள்ளது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தாரின் தலைமை அலுவலகம், திருப்பூர் மங்கலம் ரோடு, செங்குந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி, அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி என, பல்வேறு போட்டிகள், ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெற்றது.

கே.ஆர்.நாகராஜன் வாழ்த்து

இதில் வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு, பரிசளிப்பு விழா, ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, விழாவுக்கு, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார். நிறுவனத்தின் மனித வளத்துறை உதவி பொது மேலாளர் மோகன் வரவேற்று பேசினார்.

இதில், கிரிக்கெட் போட்டி, பேச்சு போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ராம்ராஜ் ஊழியர்களுக்கு, நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

முதன்மை செயல் அதிகாரிகள் செல்வகுமார், கணபதி, மோகன் ஆகியோரும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். விழாவில், ஊழியர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். இதில், ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.