சென்னையில் 129 பள்ளி வாகனங்களின் தரம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை, மே 16–

சென்னையில் உள்ள 49 பள்ளிகளுக்கு சொந்தமான 129 பள்ளி வாகனங்களின் தரம் குறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் சென்னை மேற்கு மற்றும் தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 49 பள்ளிகளிலிருந்து 129 பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி, சென்னை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன், போக்குவரத்துத் துறை இணை ஆணையர் மணக்குமார், சென்னை எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், மேற்கு மண்டல போக்குவரத்து வட்டார அலுவலர் பாஸ்கரன், தென்மேற்கு மண்டல வட்டார அலுவலர் ஸ்ரீதர், மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வின்போது வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்து மீண்டும் ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்பட்டது.