கோவை மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி: 80 வீரர்கள் பங்கேற்று அசத்தல்

ஒண்டிப்புதூர், மே 16–

கோவை புலியகுளம் அந்தோணியார் ஆண்கள் பள்ளி வளாகத்தில், ஆலயம் பவுண்டேசன் வெல்பேர் டிரஸ்ட் மற்றும் கோவை ஜிம், பிட்னஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, அண்ண திமுக புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். அன்பு (எ) செந்தில்பிரபு முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதுமிருந்து, 30 உடற்பயிற்சி மையங்களைச் சேர்ந்த, 80 வீரர்கள் தங்களது உடற்கட்டழகை மேடையில் நடுவர்கள் முன் காண்பித்தனர்.

இந்த போட்டியில், 55 கிலோ பிரிவில் ராமநாதன், பிரகாஷ், தங்கவேல், 60 கிலோ பிரிவில் முரளிதரன், ரவீந்திரன், விநாயகமூர்த்தி, 65 கிலோ பிரிவில் முகேஷ், ராஜன், தென்னரசு, 70 கிலோ பிரிவில் சரவணன், பத்மநாபன், காளிதாஸ், 75 கிலோ பிரிவில் ஹரிஹரன், விபின், அர்விந்த், 80 கிலோ பிரிவில் பாண்டி, விஜயகுமார், சபரீஸ் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். நிறைவு விழாவில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கபணம், பதக்கம், கோப்பை, சான்றிதழ் உள்ளிட்ட, பரிசு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் பகுதி செயலாளர் செல்வக்குமார், முன்னாள் மாமன்ற கணக்கு குழு தலைவர் கணேசன், அமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.