கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி, மே.16–

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாபயணிகள் , பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளனர். இதனால் கும்பக்கரை சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.