ஏற்காடு கோடை விழா படகு போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற சுற்றுலாவினர்

ஏற்காடு, மே 16–

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 43வது கோடை விழா கடந்த, 12ந் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவின், நான்காம் நாளான நேற்று, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி, மாவட்ட விளையாட்டு துறை சார்பில், சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.

படகு போட்டி ஆண்கள் பிரிவில், சேலம் சரண் – ஈஷா இணை முதல் பரிசு, சேலம் நந்தகுமார் – கிரண் இரண்டாவது பரிசு, திருத்தணி அபாஸ் – ராம் மூன்றாவது பரிசு வென்றனர்.

பெண்கள் பிரிவில், சேலம் கவிதா யாமினி முதல் பரிசு, சேலம் பவதாரிணி – மஞ்சு இரண்டாவது பரிசு, சேலம் உஷா -ஜோஷிகா மூன்றாவது பரிசு வென்றனர். இருபாலர் பிரிவில், சேலம் சுப்ரமணி -கலைச்செல்வி முதல் பரிசு, ஏற்காடு ரமேஷ் – வாணிஸ்ரீ இரண்டாவது பரிசு, ஈரோடு சிவா -நித்யா மூன்றாவது பரிசு வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த, சிலம்பாட்ட போட்டியில், ஆண்கள் பிரிவில் சிலம்பொலி அணி முதல் பரிசு, ஜெயம் கலைக்கோட்டம் இரண்டாம் பரிசு, பெண்கள் பிரிவில் சிலம்பொலி அணி முதல் பரிசு, ஜெ.ஜெ. பயிற்சியகம் இரண்டாம் பரிசு வென்றனர்.

சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ரத்தின குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.