அமைச்சர் பதவி வேண்டும்: பகுஜன் சமாஜ் ஒரே எம்எல்ஏ பிடிவாதம்

பெங்களூர்:

கர்னாடகாவில் காங்கிரஸ் – – மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைந்தால் அமைச்சர் பதவியைத் தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான மகேஷ் நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கியுள்ளார்.

கர்னாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 104 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றன. 2 இடங்களில் சுயேச்சைகள் வென்றனர்.

கர்னாடக சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

20 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு இடத்தில் மட்டும் வென்றது. கொல்லேகல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் என் மகேஷ் வென்றார்.

மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், அதில் தனக்கு அமைச்சர் பதவியை தர வேண்டும் என்று மகேஷ் தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.