பாலாவின் உதவியாளர் கீதாராஜ் புத் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘நர்மா’!

சென்னை, மே. 15–

நந்திதா ஸ்வேதா விஜய் வசந்த் நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத்.

ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் படம். சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு, தேசிய விருதுப் பெற்ற ராஜா முகமது எடிட்டர். கலை இயக்கம் ஜெய் காந்த், ஓம் பிரகாஷ் – சண்டை காட்சி இயக்குனர். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.

எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. நந்திதா ஸ்வேதா, 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். நாகர்கோயிலில் பிரம்மாண்டமான முறையில் திறந்தவெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘ ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.