அபியும் அனுவும், சினிமாவில் உததோடு உதடு இச்… இச்… முத்தக்காட்சி

‘‘அபியும் அனுவும்’’ பட டீஸரில் இளம் நாயகன் டொவினோ தாமஸும், இளம் நாயகி பியா

பாஜ்பாயும்’’ லிப் டூ லிப் உததோடு உதடு பதித்து ‘இச்… இச்… இச்…’’ முத்தம்கொடுக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைவார்கள். பெண் ஒளிப்பதிவாளர் இயக்குனர் விஜயலட்சுமி படமாக்கியிருக்கும் காட்சி பரபரப்பு ஏற்படுத்தும். மறுபக்கம் சர்ச்சையை கிளப்பும். நாம் எங்கே போகிறோம் (கோ வாடீஸ்) ஹாலிவுட் பாணிக்கா!

விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமான எமோஷன் இருக்கும். அபியும் அனுவும் படத்தின் விளம்பர காட்சி ப்ரோமோ மற்றும் பாடல்கள் அதை பறை சாற்றும். இயக்குனர் பிஆர் விஜயலக்‌ஷ்மி தனிச்சிறப்புடைய காதலை அழகுபடுத்தி படத்தில் காட்டியிருக்கிறார்.

“அபி (டொவினோ தாமஸ்), அனு (பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புதுப்பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாக பொறுத்தி பார்த்தேன். அந்த கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தங்களை பிரதிபலிப்பதை உணர்வார்கள்” என்றார் விஜயலட்சுமி.

மதன் கார்க்கியின் வரிகள் ஓகோ

“தரண் அவரது முதல் படத்தில் இருந்தே சிறந்த காதல் பாடல்கள் இசையமைப்பதில் திறமை வாய்ந்தவர். அவரது அனைத்து படங்களின் ஆல்பங்களுமே எப்போதும் கேட்கக் கூடிய வகையில் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களிலும் அவரது இசை அறிவு வியக்க வைக்கிறது. தரண் இசை மதன் கார்க்கியின் அற்புதமான பாடல் வரிகளோடு இணையும்போது அது படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது” என்றார்.

படத்தில் வசனம் எழுதியிருக்கும் கே சண்முகத்தை மறக்காமல், அவரைப் பற்றி கூறும்போது, “கதாபாத்திரங்கள் சண்முகம் எழுதிய வசனங்களோடு சேர்ந்த பின்பு தான் முழுமையடைந்தது. அந்த வகையில் சண்முகம், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவரது வசனங்களால் இன்னும் வலிமையாக்கி கொடுத்தார்” என்றார்.

அபியும் அனுவும் படத்தை சரிகம ஃபிலிம் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூட்லீ ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இம்மாதம் 25ம் தேதி படம் வெளியாகிறது.

* இது எனக்கு ரொம்பவே சவாலான படம். இந்த கதாபாத்திரத்தை செய்ய எனக்கு எந்த படமும் இன்ஸ்பிரெஷனாக இல்லை. ரொம்பவே நேர்மையான படம், சமூகத்தில் நிறைய கேள்விகளை முன்வைக்கும். இதில் நடித்தது பெருமையான விஷயம் என்றார் நடிகை பியா.

* இயக்குனர் விஜயலட்சுமி படத்தில் இரண்டு பாடல்கள் தான். கதையை சொல்லும் அந்த இரண்டு பாடல்களையும் திரைக்கதையில் சிறப்பாக பொருத்தியிருக்கிறார். டொவினோ தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார் என்றார் இசையமைப்பாளர் தரண்.

* இந்தக் படத்தில் நான் தாண்டி வந்த உணர்வுகளை நான் நிஜத்தில் கூட இதுவரை உணர்ந்தது கிடையாது. இதுவரைக்கும் நான் செய்யாத விஷயங்கள் இந்த படத்தில் இருந்தது என்றார் நடிகை ரோகிணி.

* திரையுலகில் சரித்திரம் படைத்த மேதை பி ஆர் பந்துலுவின் மகள் தான் விஜயலக்‌ஷ்மி. ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை விட்டு விட்டு துறை மாறி இசையமைக்க போனபோது ஏன் நீங்க படம் பண்ணாம போறீங்க என கேட்டேன். ஆனால் இப்போது அவர் இயக்கும் படத்தை சரிகம தயாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிக நல்ல படமாக வந்திருக்கிறது என்றார் கலைப்புலி எஸ்.தாணு.

ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜி

* அடுத்த 5 வருடங்களுக்கு கான்செப்ட், கதையுள்ள படங்கள் தான் பேசப்படும். விஜயலட்சுமியிடம் 4 வருடங்கள் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களிடம் வேலை பார்த்தது கல்லூரியை விட்டு வெளியே வந்த ஒரு திருப்தி கிடைத்தது. ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலக்‌ஷ்மி தான். டொவினோ தாமஸ் தென்னகத்தின் இம்ரான் ஹாஸ்மி என்று கூறலாம்.

யாருடைய உதவியாளர் மணிரத்னம்?

மணிரத்னம் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் விஜியின் அண்ணன் ரவி பந்துலுவின் கன்னட படத்தில் வேலை செய்திருக்கிறார்.

22 வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்காங்க. ரொம்ப அழகா இருக்காங்க. ரொம்ப நாள் கழித்து பிரபுவுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி’’ என்றார் நடிகை சுஹாசினி.