தீதும் நன்றும்

அன்று அமரன் பல வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்தான்.
ஊர் மிகவும் மாறி இருந்தது. கட்டிடங்கள், சாலைகள் கூடியிருந்தது. ஆனால் விவசாய வயல் வெளிகள் கானாமல் போய் இருந்தது.
மாட்டு வண்டிகளையும் மாடுகளையும் காணமுடியாமல் இருந்தது. அன்று சைக்கிள் நிறைந்த காலைகளில் இரண்டு சக்கர ஸ்கூட்டர் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைத் தான் காண முடிந்தது.
தானும் மாறிவிட்டதை உணர்ந்த அமரன் அன்று எந்த சூழ்நிலையில் ஊரை விட்டு ஓடினான் என்பதை நினைத்துப்பார்த்தான்.
அன்று அவன் ஆவேசப்பட்டதற்கு காரணம் சிறியது தான்.
அது கல்லூரி நாள் தவறுகள் அனைத்தையும் குறைவின்றி கொண்டிருந்தான். அழகிய பெண்களை சைட் அடிப்பது. புகை பிடிப்பது. மதுபானம் அருந்துவது, கல்லூரிக்கு ஒழுங்காக வராமல் இருப்பது ;வந்தாலும் தேர்வில் தேர்ச்சி அடையாமல் பாக்கி வைத்திருப்பது; சவரம் கூட செய்து கொள்ளாமல் தாடியுடன் சோம்பேறியாய் சுற்றி வருவது என்று மேற்கண்டவற்றையெல்லாம் விமர்சனம் செய்து காதலி அமரன் காதலை ஏற்க மறுத்தது தான் அந்த சிறிய காரணம்.
வாலிப முறுக்கு ரோஷம் தன் மரணம் சகிப்புத்தன்மை இல்லாதது தான். அந்த கோபத்திற்கு காரணம் என்பதை அறியாமல் கோபங்கொண்டு வீட்டில் உள்ள பெற்றோர்களுக்குக்கூட தகவல் சொல்லாமல் ஊரை விட்டு ஓடிப்போனான் அமரன்.
அருகில் உள்ள நகரத்திற்குச் சென்று ஏதாவது வேலை தேடலாம் என்ற போது தான் தன்னுடைய குறைகள் அவனுக்குத் தெரிய வந்தது. வேலைத் தேடிச் செல்லும் இடத்தில் எல்லாம் என்னபடிப்பு எத்தனை மதிப்பபெண் என்ற கேள்வி, கல்லூரியில் படித்து தனக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்க வில்லையே என்ற வருத்தம் வந்தது.
பசி வந்திடப் பத்தும் போகும் என்ற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.
ரோட்டில் கையேந்திபவன் நடத்தும் ஒரு நபரிடம் கடும் பசிக்கு உணவு சாப்பிட்டுவிட்டான். அவர் கேட்ட பணம் அவனிடம் இல்லாமல் போனது. விழித்தான்.
அனுபவ அறிவு கொண்ட கடைகாரர் தம்பி காசு இல்லையென்றால் என்னிடம் வேலைக்கு சேர்ந்து விடு; தினமும் மூன்று வேலை உணவு
தருகிறேன் ;செலவுக்கு பணமாக ரூபாய் இருபதும் தருவேன் என்றார். கௌரவத்தை விட்டு விட்டு வேலைக்குச் சேர்ந்தான்.
இந்த வேலையில் கிடைத்த அனுபவத்தை கொண்டு விரைவில் ஒரு ஹோட்டலில் தினசரி இருநூறு போய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தான். ஓய்வு நேரத்தில் விட்ட கல்வியை படித்து தேர்ச்சி பெற்றான்.
அடுத்து அவன் கௌரவம் மீண்டது.
நம்பிக்கை அவனை மேலும் உயரச் செய்தது . பட்ட மேற்படிப்பு முடித்து நிரந்தரமான பதவியில் சேர்ந்தான். பெற்றோர்களுக்கு வேண்டிய பணம் அனுப்பத் தொடங்கினான்.
பெற்றோர்கள் அவனிடம் பேசும் போதெல்லாம் எப்போது வர வேண்டுமோ அந்த நேரத்தில் கட்டாயம் வருவேன் என்று சொல்லி ஒவ்வோரு தடவையும் சமாளித்துப் பேசி முடிப்பான்.
அன்று என்னைன்ன காரணத்தைச் சொல்லி காதலை நிராகரித்தாளோ அந்த தீமையெல்லாம் இன்று நன்மையாகி விட்டாதே என்று யோசித்துப்
பார்த்தான். ஒரே ஒரு குறைதான் தெரிந்தது. காதலிக்கு சொந்த வீடும் காரும் இருந்தது. ஆனால் அவனிடம் வீடு தான் இல்லை.
அவன் வாழ்ந்த தெருவில் எல்லா வீடுகளும் மாடி வீடுகளாக மாறி இருந்தது. அவனை வீட்டு வாசலில் அம்மாவும் அப்பாவும் வரவேற்ற போது சொந்த வீடு இல்லை என்ற குறையும் நிவர்த்தியாகி இருந்தது. அவனை உள்ளே அழைத்து உபசரித்த பெற்றோர்கள் நீ தயார் செய்து கொண்டு எங்களுடன் வா என்றார்கள். எங்கே என்று கேட்டதற்கு ஒரு முக்கியமான திருமணத்திற்கு என்று சொன்னதும் அவனால் மறுக்க முடிய வில்லை.
திருமண மண்டபத்தில் கூட்டம் கூட ஆரம்பித்தது. வாசலில் மணமகன் பெயரைப் படித்ததும் தன் காதலியின் ஞாபகம் வந்தது. இருந்தாலும் இன்று இவன் நிலமை மாறிவிட்டதை அறிந்து மனதுக்குள் மகிழ்ச்சியுடன் இருக்கையில் அமர்ந்து நிச்சயதார்த்த நிகழ்ச்சியைப் பார்த்தான். மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. மாப்பிள்ளையை ஊர் வலத்தின் பாதையில் போலீசார் மறித்து அவனைக் கைது செய்தார்கள்.
சிறிது நேரத்தில் என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. காதலியின் தோழி மணப் பெண்ணிடம் நீ எதிர்பார்த்ததை விட மேலான தகுதியுடன் அமரன் ஊருக்கு வந்திருக்கிறான் என்பதைச் சொன்னாள்.
அவளுக்கு நம்பிக்கை வந்து விட்டது.
பெற்றோரிடம் சென்று அமரனை பற்றி சொல்லி அவனை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்று கெஞ்சினாள். பெற்றோரும் சம்மத்தினர்.
அவன் நடக்காது என்று நினைத்த திருமணம் நடக்க உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அன்று காதலி சுட்டிக்காட்டிய அவனிடமிருந்த தீதும் இன்று அவன் சாதித்துப் பெற்ற நன்றும்தான் தான் என்பதை உணர்ந்தான். பெற்றோர்கள் ஆசியுடன் திருமணத்திற்கு சம்மத்திதான் அமரன்
கோவிந்தராம்