முன் எச்சரிக்கை

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஓய்வுக்குப் பின் தன்னுடைய காவல் உதவி மையத்தை தொடங்கினார்.
முதல் கூட்டத்தில் தன் அனுபவங்களை எப்படி மற்றவர்களிடமிருந்த பாலியல், பொருளாதர மற்றும் இதர இனங்களிலிருற்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று அறிவுரை வழங்கினார். இதற்காக பெண்கள் தற்காப்புக் கலையான ஜுடோ, குங்ஃபூ, சிலம்பம், மல்யுத்தம் என்றவைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. இலகுவாகவும் எளிதாகவும் உள்ள சிலவற்றை கற்றுத் தருகிறேன் அவற்றை நீங்கள் உங்கள் பெண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்தால் போதும் என்றார்.
என்ன தான் சொல்லுவார் என்று பெண்கள் ஆர்வமாக அமர்ந்திருந்தனர். பதின் பருவ பெண் பிள்ளைகளைத் தான் ஆண் காமுகர்கள் பலாத்காரம் செய்ய முயற்சி செய்வார்கள். முதலில் சிறு பிள்ளைகளுக்கு, மிட்டாய்கள் குளிர்பானம் கொடுத்து மயக்கமடையச் செய்வார்கள். இதை தடுக்க பிள்ளைகளிடம் சிறிய மாத்திரை அளவிலான போதையை முறிக்கும் மாத்திரைகளை கொடுத்து வைக்கலாம். யாராவது மயக்க முயற்சி செய்யும்போது அந்த மாத்திரைகளை உட்கொண்டால் தவறு செய்ய முற்பட்டால் சுதாரித்து கொள்ளலாம் என்று சொன்னார்.
அடுத்து பெண் பிள்ளைகள் அவர்கள் கைப்பையில் மிளகாய்ப் பொடி அல்லது மிளகு பொடி போன்ற ஸ்பிரே சாதனங்களை வைத்துக் கொள்ளச் சொல்லலாம் அல்லது கை விரலில் கூர்மையன பகுதி கொண்ட மோதிரங்களை அணியச் செய்யலாம். இது ஆபத்து நேரங்களில் தான் தற்காலிகமாக உதவும். மேலும் தற்போது நிறைய மின்னணு சாதனங்கள் உபயோகத்திற்கு வந்திருக்கிறது. இதை எப்படியெல்லாம் ஆபத்து நேரத்தில் பயன்படுத்தலாம் என்று சொல்வேன் அதை நீங்கள் பயன்படுத்தினால் நல்லதாக இருக்கும் என்றார்.
முதலாவதாக இந்த காலத்து பிள்ளைகள் அனைவரும் செல்போன் டேப்லெட் முதலியவைகளை தினசரி பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏற்பாடுகளை செய்யலாம். உதாரணமாக செல்போனில் ஜிபிஎஸ் மற்றும் கூகுள் வரைபடம் அமைப்புகள் இருக்கும். அந்த பெண் பிள்ளையின் செல்போனில் அவள் இருக்கும் இடம் பயணம் செய்யும் இடம் முதலியவைகளை கூகுள் வரைப்படத்தில் பதியச் செய்யலாம் காவல்துறை உதவிக்கு அவசர எண்ணை அழைக்க பதிவுகள் செய்தால் ஆபத்து நேரத்தில் உதவும்.
ஒரு பெண் ஆட்டோ அல்லது காரில் பயணம் செய்யும் போது ஏதாவது தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டால் உடனே காவல் துறைக்கு மறைமுகமாக அழைப்பு செய்தால் உடனே காவல்துறை வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுனரை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் தவறு செய்ய யோசனை செய்ய ஆரம்பிப்பார்கள்.
மேலும் வயதுக்கு வந்த பிள்ளைகள் பெரும்பாலும் அன்னிய ஆடவர்களைவிட குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தான் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி தவறுகள் நேரும் போது அந்தப் பிள்ளை வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் யாராவது தொல்லை செய்தாலும் காவல் துறைக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ அழைப்பு செய்யலாம். உடனே அவர்கள் தொல்லைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பிறகு அந்த மாதிரி நண்பர்களையும் உறவினர்களையும் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வருகையை தவிர்க்கலாம்.
இதற்கு முன் 10 வயது முதலே பெண் பிள்ளைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எவை யார் எங்கே தொட்டால் அனுமதிக்கலாம் என்று அறிவுரை கூற வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு தொட அனுமதித்தால் பிள்ளைகளின் உடலில் என்னனென்ன தவறுகள் நடக்குமென்றும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை நயமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் தெரிந்து கொண்டால் பிள்ளைகள் பாதிக்கப்படாமல் இருக்க பழகிக் கொள்ளலாம்.
இந்த மாதிரி முன்னெச்சரிக்கை பழக்கங்களினால் சில வினோதமான செயல்களும் நடந்ததுண்டு.
திருமணமான மணப்பெண் முதலிரவில் கணவன் தொட்டபோது அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு செல்போனில் அழைப்பு அனுப்பி புகார் செய்து விட்டாள். உடனே காவலர்கள் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். உடனே பெண் சுதாரித்துக் கொண்டு அன்னிச்சை செயலாகத் தெரியாமல் அழைத்து விட்டேன். மன்னித்துக் கொள்ளவும். இன்று எனக்கு முதலிரவு என்று உண்மையைச் சொன்ன பிறகு காவலர்கள் இனி இந்த மாதிரி அழைப்பைப் போனில் தடுத்து விடுங்கள் என்று சொல்லி சிரித்துக் கொண்டே வெளியேறினர்.
எதிலும் முன்னெச்சரிக்கையாக இருக்கப் பழகி கொள்ள வேண்டும்.