மேஜிக்

கண்கட்டுவித்தை – அதாவது மேஜிக் ஒரு உயர்தரமான பொழுது போக்குக் கலை. ஒருவர் மனமும் புண் படாமல், தீமை ஏற்படாமல், துரோகம் செய்யாமல், ஏமாற்றி பொருள் பறிக்காமல் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு உன்னத கலை மேஜிக் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை மாஜிக் நிபுணர் பாலா என்னுடன் நேரடி சந்திப்பில் கூறிய வார்த்தைகள் சென்னையில் முகாமிட்டிருக்கும் ரஷ்யாவின் பிரபல மாஜிக் நிபுணர் அலெக்ஸ் பிளாக்கின் நிகழ்ச்சியை கண் எதிரில் பார்த்த போது என் காதுகளில் மறு ஒளிபரப்பாய் ஒலித்தது.

யாரெல்லாம் மேஜிக் பயிலலாம்? மேஜிக்க்கில் ஆர்வம் உள்ள அனைவரும் (வெறும் ரகசியங்களை மற்றும் தெரிந்து கொள்ள அல்ல) எப்படி ஒரு மேஜிக் நிபுணர் ஆவது?? என்று அன்றைக்கு அவர் என்னசொன்னாரோ, அதையே மேஜிக் என்றால் என்ன என்று முதலில் புரிந்து வேண்டும். பின்பு எந்த ஒரு கலையைப் போன்று முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, எல்லாம் உங்கள் பயிற்சி, பயிற்சி, பயிற்சி தான் என்று அலெக்ஸ் பிளாக் சொன்னபோது எல்லாருக்குமே அடிப்படை ஒன்றே என்று அனுமானிக்க முடியும்.

* திடமான தன்னம்பிக்கையும், மன உறுதியும் அவசியம்.

* சஞ்சலப் புத்தி இருக்கக் கூடாது.

* அழகாகவும், கவர்ச்சியாகவும் பேச தெரிந்து இருக்க வேண்டும்.

* கண்களை விட கைகள் மிக வேகமாக செயல் பட வேண்டும்.

* சபைக் கூச்சம் கூடவே கூடாது.

* நல்ல ஞாபக சக்தி வேண்டும் என்று அலெக்ஸ்சும் பட்டியலிட்டு காட்டிய போது அவரின் அனுபவம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ருமேனியா மாம்பழ நிறம் (செக்கச்செவேல் என்று சொல்லலாமா), “சிக்” என்று வைத்திருக்கும் உடல்கட்டு, நிகழ்ச்சி நடைபெறும் அந்த 130 நிமிட நேரமும் புன்னகை மாறாத முகம், கண்ணிமைக்கும் நேரத்தில், வித்தை காட்டி விந்தை புரியும் விரல்கள், அந்நிய மொழி பேசினாலும் அவர் எதை சொல்ல வருகிறார் என்பதை அவரது “உடல் பாஷை” (பாடி லாங்வேஜ்) மூலம் சாமானியனுக்கும் புரிய வைத்திடும் சாமர்த்தியம் இவை எல்லாம் மேஜிக் மன்னன் அலெக்ஸ் பிளாக்கின் வசீகரிக்கும் சிறப்பு அம்சங்கள் அவர் தான் மக்கள் குரலின் இன்றைய சிறப்பு விருந்தினர்.

கண்கட்டி வித்தை காட்டி விட்டு – ஓய்வெடுக்க வந்த நேரம் வாய்க்குள் உணவு போய்க் கொண்டிருந்த நேரமும், பேட்டியைத் துவக்கினோம். அனுபவத்தை அழகாய் சொல்ல ஆரம்பித்தார்.

ரஷ்யாவின் சரடோவ் நகரைச் சேர்ந்தவன் நான். கல்லூரி கால கட்டத்தில் படிப்பைத் தொடரும் நேரத்தில் வாழ்க்கைத் தொழிலாக வேறு ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள்ளலாமே என்று மனசு அலைபாயந்தது. சிம்பிலான சிட்டுகட்டு வித்தையில் பயிற்சியை தொடங்கினேன். கையில் நாணயத்தை வைத்து உருட்டி உருட்டி விளையாட்டு காட்டி அதை மறைய வைக்கும் அந்த கண்கட்டி வித்தையில் என் நண்பர்கள் கூட்டத்தை சேர்த்தேன். பயிற்சியும், முயற்சியும் தொடர்ந்தது. இன்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னால் சாக்லட் பல்கலைகழகத்தில் அட்வான்ஸ் மேஜிக் கலையை கற்க காலடியை எடுத்து வைத்தேன்.

பல்கலை கழக பாடம் முடிந்தது. பட்டம் பெற்றேன் அது முதல் மேடை ஏறி மாயாஜால மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தேன். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந், சீனா, மெக்சிகோ, துபாய், குவைத், ஸ்பேயின் நாடுகளில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.

இந்தியாவுக்கு இப்போது தான் விஜயம். எனக்கு இங்கு முதல் அனுபவம். டிப்பிகல் மேஜிக் ஷோ– அதாவது வழக்கமான மேஜிக் ஷோவாக நான் இதை நடத்துவது இல்லை. அடுத்தவரிடமிருந்து மாறுமட்டு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை ஆர்வத்தோடு இருப்பவன் நான். அதனாலயே என் நிகழ்ச்சிக்கு வந்து ரசிபவர்கள் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்…’ என்று என் கலைக்குழுவை அடையாளம் காட்டி ஆராதிக்கிரார்கள். (இதை சொல்லுகிற போது அலெக்ஸ் பிளாக், அவரோடு வெற்றிக்கு நிழலாய் இணைந்திருக்கும் எலிசா முகத்தில் எத்தனை மகிழ்ச்சி?!)

புதுமை, பயிற்சி மேல் பயிற்சி, செய்வதை நேத்தியாக செய்தல் … இந்நிகழ்ச்சிக்கு ஆதாரஸ்ருதி என்றாலும் என் மனசை கொள்ளைக்கொண்டு இருக்கும் அமெரிக்க பிரபல டான்சர் மைக்கேல் ஜாக்சன், மாஜிக் நிபுணர் டெபிட் காப்பர் பில்டு இருவரும் எனக்கு கிரியாஊக்கிகள். ஆராம்பம் முதல் கடைசி வரை எப்படி நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்துவது, களைக்கட்ட செய்வது, ரசிகர்களை நம் கூடவே பயணிக்க செய்வது, கொஞ்ச நேரம் கூட சோர்வடையாமல் சொகுசாக உட்கார்ந்து ரசிக்க வைப்பது கன்னும் உத்தியை படித்தேன். அதை என் புத்தியில் பிடித்தேன். கத்தி முனையில் நடப்பது மாதிரி இந்த கண்கட்டுவித்தையை வடித்தேன்.

ஒவ்வொரு நாடும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. இந்தியாவில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னால் மக்கள் எதை ரசிப்பார்கள் எப்படி ரசிப்பார்கள், எதைத் கண்டால் பயந்து ஓடுவார்கள், என்று அவர்களின் மனநிலையை படித்தறிந்தேன் அதனாலயே அவர்களை பயத்தில் உறைய வைக்கும், அதிர்ச்சியில் நடுங்க வைக்கும் மிகவும் ஆபத்தான நிகழ்ச்சிளை ஓரம்கட்டிவிட்டேன். (டெத் சா ட்ரிக் இதில் ஒன்று அதாவது மின்சார ரம்பம் கொண்டு ஒருவரை இரண்டு துண்டாக்கி மீண்டும் இணைத்து காட்டுவது போல ஒரு தந்திர காட்சி)

குழந்தைகள் வரவேண்டும், வாய்விட்டு சிரிக்கவேண்டும், கைத்தட்டி மகிழவேண்டும், அழைத்துவரும் பெரியவர்களும் ரசிக்கவேண்டும், குழந்தையோடு குழந்தையாய் மாறவேண்டும் என்பதை என் நிகழ்ச்சியின் மூலப்பொருளாக எடுத்து இருக்கிறேன். 4லில் இருந்து 80 வரை என் ரசிகர்கள்.

இந்தியாவில் எல்லாருக்குமே தெரிந்து இருக்கும் சுலபமான தந்திரத்தை நான் மேடையேற்றுவது இல்லை வாய்விட்டு சிரிக்க வைக்கும் தந்திர காட்சிகளை நடத்துகிறேன் நாடக பாணியில் (வசனம், நடிப்பு) நகர்த்துகிறேன். மற்றவர்களின் நிகழ்ச்சிகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் விதத்தில் பேக்ரவுண்டு ஸ்கோர் அதாவது பின்னனி இசையில் புகுத்தி இருக்கிறேன் ரஷியா என்றாலே நினைவுக்கு வருவது பாலே டான்ஸ் அதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் கொடியிடை – வில்போல் வளையும் அழகு பெண்களை கொண்டு பாலே டான்ஸ் அரங்கேற்றுகிறேன்.

இரு….. இந்திய ரசிகர்களுக்கு இனிமை விருந்தாகும்.