நோயற்ற வாழ்வு

அனைவருக்கும் ஆண்டவன் பேரில் ஆசிர்வாதம். என் உரையைக் கேட்கவந்த அனைவருக்கும் என் நன்றிகள் .
இன்று நான் புதிதாக ஏதும் சொல்லப் போவதில்லை. இந்நாடும் நாட்டில் நடக்கும் செயல்களால் எப்படி எல்லாம் சுற்றுப்புற சுகாதாரம் கெட்டுப் போயிருக்கிறது. மனிதர்களுக்கு எப்படியெல்லாம் புதுப்புது நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மனித ஒழுக்கம் எப்படி கெட்டுப் போயிருக்கிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டி இனிமேலாவது நீங்கள் உணர்ந்து உங்கள் எதிர்காலத்தையும் உங்களின் வாரிசுகள் நோய் நொடி இல்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல இருக்கிறேன்.
நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது கொசுக்களை அழிக்க தேசிய மலேரியா ஒழிப்புத்திட்டம் என்று இருந்தது. அதன்படி கொசுக்களை ஒழிக்க வாரந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் கொசு மருந்து அடித்து வீட்டுக்காரர்களிடம் கையொப்பம் பெறுவார்கள் ஆனால் கொசு மட்டும் ஒழியவில்லை. அதிகமாகத்தான் ஆகி உள்ளது . கொசுவின் குணம் கொசு மருந்தின் வீரியத்தை தாங்கும் இயல்பு கொண்டு விட்டது. ஏன் கொசு வருகிறது என்பதை சிந்திக்காது மருந்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்தனர்.
மருந்து அடிப்பதை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்திருந்தால் கொசுவை இல்லாமல் செய்திருக்கலாம். வீட்டின், தெருவின் சூழல்நிலையை சுத்தமாக வைத்திருந்தால் கொசு தானாகவே வரமால் போய் இருக்கும். அதைச் செய்யாமல், கொசு மருந்து கொசுவர்த்தி கொசுவலை, புகை போடுதல் என்று அதைத்தான் அதிகப்படுத்தி இருக்கிறோம்.
இதே போல் உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டால் இயற்கையை பின் தள்ளி செயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள், காய் கனி கீரைகள் மற்றும் புதிய புதிய பதார்த்தங்கள் உற்பத்தி செய்யத் துவங்கியது பெரிய தவறு.
வெள்ளையர்கள் ஆட்சி செய்த போது நாம் இயற்கை உரங்களை போட்டு விவசாயம் செய்து வந்தோம். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு சிலவிஞ்ஞானிகள் தங்கள் மேதா விலாசத்தைக் காட்டிக் கொள்ள செயற்கையான ரசாயன உரங்களை உற்பத்தி செய்ய திட்டம் போட்டு நம்நாட்டு விவசாயக் கலாச்சாரத்தை திசை திருப்பி விட்டனர்.
செயற்கை ரசாயண உரங்கள் மற்றும் பூச்சிக் கொள்ளிகள் பயன்படுத்தினால் மண்ணின் தரம் மற்றும் மண்புழுக்கள் அழிந்து விவசாயத்தரம் குறையுமே என்று யாரும் சிந்திக்க வில்லை. அதிக நாட்களில் வளர்ந்து நன்கு சத்தான விளைச்சலை ஆராய்ச்சி என்று சொல்லி குறைந்த நாட்களில் பலன் கிடைக்கும் தானியத்தை விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவு தான் தரமற்ற சத்துக்குறைவான விளைபொருட்கள் கிடைக்க ஆரம்பித்தது.
இதன் விளைவாக உணவில் தரம் குறைந்தது புதியபுதிய நோய்கள் ஆரம்பித்தது. இதையே சாக்காகக் கொண்டு வௌிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களும் ஆராய்ச்சி என்ற பெயரில் புதிதாக மருந்துகளை விற்பனை செய்ய ஆரம்பித்தன. மருத்துவர்களும் பெரும்பணம் சேர்க்க ஆசை கொண்டு ரசாயனப் பொருட்கள் மருந்தாக கொடுக்கச் செய்தனர். இயற்கையான கீரை, காய், கனிகள், மூலிகைகள் மறந்து செயற்கையான பொருட்களால் உற்பத்தி செய்யப் பட்ட மருத்துகளை சாப்பிடுவது நாகரீகமாகிவிட்டது.
வாழும் சூழ்நிலைகளும் மாற ஆரம்பித்தது.
வீட்டின் நாலாபுறம் இடம் வீட்டு வீடு கட்டி வந்ததை மாற்றி சுற்றிலும் இடம் விடாமல் வீடு கட்டி வந்ததை மாற்றி சுற்றிலும் இடம் விடாமல் வீடுகட்ட ஆரம்பித்தார்கள். இதனால் வீட்டிற்குள் இயற்கையான வெளிச்சமும் காற்றும் வருவது தடை செய்யப்பட்டது.
வீட்டின் பின் பகுதியில் கொல்லை என்று சொல்லி சிறுசிறு செடிகள் , கொடிகள், மரங்கள் வளர்ப்பது தடைசெய்யப்பட்டது. காலி இடம் இல்லாமல் மொத்த இடத்திலும் வீடு கட்டப்பட்டது. காலி இடம் இல்லாமல் மொத்த இடத்திலும் வீடு கட்டப்பட்டது.
சாலைகளின் ஓரங்களில் மரம் நடப்பட்டது. கார்பன் டை ஆக்ஸைடை குறைத்து ஆக்சிஜனை மேம்படுத்த மறந்து விட்டனர்.
மரங்கள் வளர்த்து சுற்றுப்புற சூழ்நிலை சுத்தமாக இருந்த நிலைமாற்றப்பட்டது. காற்று புகாத முறையில் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு குளிர் சாதன பெட்டிகள் அமைத்து செயற்கை குளிர்ச்சியைப் பெற ஆரம்பித்தால் அந்த பெட்டி ஏற்படுத்தும் வெப்பம் வௌியில் உள்ள மரங்களை அழித்ததும் இல்லாமல் புவியின் வெப்பத்தை அதிகமாக்கி ஓசோன் படலத்தையும் பாதிக்கச் செய்தது. நகரத்திற்குள்ளே தான் வீட்டடி மனை அமைக்க நீர்வளங்களான குட்டை, குளம் கண்மாய்ய முதலியவைகளை அழித்து வீடு கட்டியதால் பூமியின் நீர் பருகை ஆழமாகி உப்பு நீர் பெறும் அளவிற்கு சூழ்நிலை மாறிவிட்டது. இதனால் செயற்கை முறையில் நீர் சுத்தம் செய்யப்பட்டு தேவையான சத்துக்கள் இல்லாத நீரை பயன்படுத்துவதால் சிறு குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே நோய்கள் தொடர ஆரம்பித்தது.
இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அனைவரும் இயற்கை விவசாயம் சிறுதானியங்கள், முதலிய விளை பொருட்களை வாங்கும் நிலை அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு ரசாயனப் பொருட்கள் கலந்த தின்பண்டங்களை வாங்கித்தருவது குறைந்து வருகிறது.
ஒன்றுக்கு பத்து மடங்கு விலைகொடுத்து இயற்கை விவசாய பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நம் தாத்தா பாட்டிகளை கேலி செய்த காலம் போய் அவர்கள் எப்படி உடல் நலத்துடன் அதிக மருந்துளை எடுத்துக் கொள்ளாமல் உணவையோ மருந்தாக்கி வாழ்ந்தார்கள் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதுவே நல்ல ஆரம்பமாக அமைய வேண்டும் என்று சொல்லி உங்கள் உடலை நீங்கள் தான் பாதுகாத்து நோய்நொடியின்றி சுகாதாரமாக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று சொல்லி என் உரையை முடிக்கின்றேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர வேண்டுகிறேன் .
கோவிந்தராம்