நேர்மைக்குப் பரிசு

அமிர்தலிங்கம் ஒரு தொழிலதிபர் .வியாபாரம் நடை பெறும் கடையில் அவர் இருக்கமாட்டார். கடையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் கடையைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும். யார் யார் எப்படி தவறு செய்வார்கள். அவர்கள் செய்த தவறுகளை எப்படி கண்டு பிடிப்பது என்ற கலை அவருக்கு கைவந்தது. ஒவ்வொரு நிலையிலும் ஒரு ஒற்றரை வைத்திருப்பார். அதே போல் ஒற்றருக்கும் ஒரு ஒற்றரை நியமித்திருப்பார்.
மனிதர்கள் ஆசைப்பட்டதை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வார்கள் என்பதை தெளிவாக அறிந்திருப்பவர். ஒவ்வொரு கவுண்டரில் யார் யார் வேலை பார்க்கவேண்டும் என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே திட்டம் போட்டு நடைமுறைப் படுத்துவார். அதே போல் வாடிக்கையாளர்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து வைத்திருப்பார். எந்த வாடிக்கையாளருக்கு எந்த விற்பனையாளர் என்ன சலுகைகள் செய்கிறார் என்பதை சிசிடிவி பொருத்தாக காலத்திலேயே அறிந்தவர்.
மேலும் எல்லாக் கடைக்காரர்களும் தங்கள் வாடிக்கையாளர் மீது நம்பிக்கை இல்லாததால் தான் கடையில் பல இடங்களில் சிசிடிவிக்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால் தெளிவான வாடிக்கையாளர் அப்படி இருந்தும் பொருட்களை எப்படியாவது களவாடி விடுவார்கள் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை தன் விற்பனையாளர்களுக்கு பாடம் எடுத்திருப்பார்.
விற்பனையாளர்கள் மாத்திற்கு ஒரு நாள் தர வட்டம் என்ற ஜப்பானிய முறையில் கூட்டம் கூட்டி விற்பனையாளரிடம் யோசனை கேட்டு நல்லது கெட்டதுகளை தெரிந்து அதை நிவர்த்தி செய்தும் வைப்பார். பிரித்து ஆளும் திட்டப் படி விற்பனையாளர்களை அழைத்து ஆலோசனையும் கேட்பார். ஒரு விற்பனையாளர் தனக்கு பிடிக்காத விற்பனையாளரைப்பற்றி கோள் சொல்லும் போது அவர் உன்னைப் பற்றி நேற்று சொன்னதை வெளிப் படையாக யேசுவார். இதனால் கடையில் திருட்டுத் தனம் குறைவதை சோதித்துப் பார்த்திருப்பார்.
கடையில் யாருக்கும் சலுகைகள் செய்யக் கூடாது என்று சொல்லி வைப்பார். அதனால் விற்பனையாளர்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நியாயமான முறையில் பட்டியல் போட்டு பொருட்களை கட்டிக் கொடுப்பார். யாராவது சிலர் பணம் குறைவாக உள்ளது என்றால் வாடிக்கையாளரிடம் விற்பனையாளர் தன் பையிலிருந்து பணம் கொடுத்து அடுத்த முறை வரும்போது தரும்படி கூறி சந்தோசமாக அனுப்பிவைப்பார்க்கள்
முதலாளியின் மகன் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கட்டாததால் பொருளை டெலிவரி செய்யவேண்டாம் என்று ஒரு விற்பனையாளர் சொல்லி விட்டார். உடனே கோபங் கொண்ட முதலாளியின் மகன் வீட்டிற்குச் சென்று தந்தையிடம் நடந்ததைச் சொன்னார். மகனிடம் உன்னிடம் அந்தநேரம் பையில் பணம் இருந்ததா எனக் கேட்டார். ஆம் இருந்தது என்று மகன் சொன்னார்.
ஏன் பணம் கொடுக்கவில்லை என்று கோபித்தார்.
என் மானம் போய் விட்டது என்று மகன் வருத்தத்துடன் போனதை அறிந்தார்.
அடுத்த நாள் கடைக்கு வந்தவர் அந்த விற்பனையாளரை தனி அறையில் அழைத்து இன்று முதல் இந்தக்கடையில் உனக்கு வேலையில்லை என்று சொல்லி அவர் கணக்கை தீர்த்து கையில் பணம் கொடுத்து அனுப்பி விட்டார். இதை அறிந்த மகன் மிகவும் சந்தோசமானார். வேலையில்லை என்று வருத்தபட்ட விற்பனையாளர் முதலாளி வீட்டிற்குச் சென்று அவர் மனைவியிடம் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னார்.
மனைவி கணவரிடம் போனில் இதைப் பற்றி பேசினால் முதலாளி மனைவியிடம் நமது புதுக் கடைக்குச் சென்று மகனிடம் வேலை உத்திரவை பெறும்படி கூறினார்.
மனைவியும் புதுக் கடைக்குப் போய் விவரத்தைச் சொல் என்றார்.
போனால் பையன் என்ன செய்வாரோ என்று யோசனை செய்து முதலாளியின் பேச்சைத் தட்டிக்விடாதே என்று சென்னார்.
கடைக்குள் போனதும் மகன் அவரை மரியாதையாக அழைத்து இன்று முதல் நீங்கள் இந்த கடையில் மேளாளர் என்று வேலை உத்திரவையும் சம்பள உயர்வையும் சொல்ல அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை .
அந்தநேரம் கடைக்குள் வந்த முதலாளி அவரை அழைத்து நீ நேர்மையாக வேலைப்பார்த்ததால் தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் என்றார்.
ஒழுக்கமாக இருந்தால் எல்லா நன்மையும் தானாக வந்து சேரும் என்று முதலாளி சொன்னதை மற்ற வேலையாட்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு உற்சாகமாக வேலை செய்ய துவங்கினார்கள்.
கோவிந்தராம்