பலாப்பழம்

அன்பழகன் பொறியியல் கல்லூரியில் சேர அன்று தன் தந்தையுடன் கல்லூரி முதல்வரைச் சந்தித்தான்.
முதல்வர் இருவரையும் முக மலர்ச்சியுடன் வர வேற்று இருக்கையில் அமரச் சொன்னார்.
தந்தை உடனே அமர்ந்தார். அன்பழகன் இருக்கையில் அமராமல் நின்று கொண்டு இருந்தான்.
பரவாயில்லை தம்பி உட்காருங்க என்று மீண்டும் ஒரு முறை சொன்னதும் முதல்வருக்கு நன்றி சொல்லி விட்டு அமர்ந்தான்.
முதல்வர் தந்தையிடம் என்ன தொழில் குடும்ப சூழ்நிலை போன்ற சில விஷயங்களை கேட்டறிந்தார்.
பின் அன்பழகனிடம் ‘‘ உன் எதிர்காலத் திட்டம் என்ன ?என்ன மாதிரி வேலையில் சேரவேண்டும் என்று கேட்டார். அன்பழகன் எனக்கு கணிப்பொறி விஞ்ஞானியாகி புதிய புதிய ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன் என்றான்.
விடுப்பு நாட்களில் என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று கேட்டார்.
உடனே அன்பழகன் தினமும் குறைந்த பட்சம் பத்து மணி நேரம் கணிப்பொறியில் வேலை செய்வேன். என்னென்ன புதிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கவேண்டும்என்று குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன் என்று சொன்னான். தந்தையின் முகத்தை உற்று நோக்கினார் .
அவர் புன்முறுவலுடன் முதல்வரிடம் கண்ணால் பேசினார்.
நீங்கள் சொல்ல நினைத்ததை மறைக்காமல் சொல்லலாம் என்றார் முதல்வர்.
மகன் தந்தையைப் பார்த்தார். மகன் தந்தையைப் பார்த்தார்.
முதல்வர் இருவரையும் பார்த்து ஏன் மறைக்கிறீர்கள் சொல்லுங்கள் என்றார்.
அவன் சொன்னதில் ஒரு பகுதி உண்மையிருக்கிறது. மீதியெல்லாம் உண்மை இல்லை என்றார் தந்தை.
விளக்கமாகச் சொல்லுங்கள் என்று முதல்வர் கேட்டதும் பெரும் பாலும் கணிப்பொறியில் திரைப்படம் மற்றும் தேவையில்லாதவைகளைப் பார்ப்பான் என்றார்.
நீங்கள் எந்த ஊர் என்றார்.
பையன் பண்ருட்டி சார் என்றான்.
அங்கு என்ன அதிகமாகவிளையும் என்றார்.
எங்கள் தோட்டத்தில் கூட நிறைய பலா மரங்கள் உள்ளது. எங்கள் ஊருக்கே பெருமை பலாப் பழம் தான் என்றான். பலாப்பழத்தை உன்னால் முழுவதும் சாப்பிட முடியுமா என்றார் முதல்வர்.
அதெப்படி சார் சாப்பிட முடியும் பழமும் கொட்டையையும் தான் சாப்பிட ஏதுவானது. மற்றதெல்லாம் கழிவு செய்ய வேண்டியவை என்றார்.
ஏன் சாப்பிட்டால் என்ன ஆகும் என்றார்.
சார் பழமும் கொட்டையும் தான் மனிதனால் ஜீரணிக்க முடியும். மற்றவை எல்லாம் மிருகங்களால் தான் ஜீரணிக்க முடியும் என்றான். உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. தெளிவாகவும் பதில் சொல்கிறாய் அதனால் உனக்கு நான் அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளமுடியுமா என்றதும் தாராளமாக உடனே ஏற்றுக்கொண்டு செயல் படுத்துவேன் என்றான் அன்பழகன்.
தம்பி கணிப்பொறி மூலமும் கைபேசி மூலமும் வலைத்தளத்தின் மூலமும் உலகில் உள்ள அனைத்து செயல்களையும் செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும். ஒருவரால் எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. நமக்கு ஏது முக்கியமோ தேவையோ அதை மட்டும் அறிந்து கொண்டால் போதும். மற்றவை எல்லாம் நமக்கு தேவைப்படாத்துடன் நம் மனதை குழப்பி தேவையில்லாத திசையில் பயணம் செய்யத் தள்ளி விடும்.
இவைகளால் நம் மனதின் உறுதி குறையும். தேவையில்லாததை பார்த்தால் மனநிலையும் உடல் நிலையும் பாதிக்கும் படிப்பின் தன்மை குறைந்து கவனம் வேறு பக்கம் போனாலும் எதிர் காலத்திட்டத்தை அடைய முடியாமல் போய் விடும். நீ காணவேண்டிய கனவு கானல் நீராகப் போய் விடும் என்றார்.
‘‘தம்பி நீ பலாப்பழத்தை எப்படி சாப்பிடுவாய் என்று சொன்னாய் ’’
பழச்சுளையையும் கொட்டையையும் மட்டும் சாப்பிடுவேன் என்றான்.
அது தான் சரி. மற்ற சக்கை, முள்ளாக இருக்கும் மேல்த்தோல் சாப்படத் தகுதியில்லாது. மேலும் இந்த வயதில் சாப்பிட்டாலும் ஜீரணம் செய்யும் சக்தியும் உன் உடலுக்குக் கிடையாது. எனவே தேவையற்ற மனதைக் கெடுக்கும் பாலுணர்வு காட்சிகளையும் கவனத்தை திருப்பும் விளையாட்டு காட்சிகளையும் தவிர்க்கவேண்டும்.
உன் படிப்பிற்கு ஆராய்ச்சி செய்ய தேவையானவை மட்டும் ஊக்கமுடன் படித்து பட்டம் பெற்று நல்லமுறையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
எங்கே இடம் தர மறுத்துவிடுவாரோ என்று நினைத்துக் கொண்டிருந்த அன்பழகன் பணிவுடன் சரிசார் என்றான்.
கல்லூரியில் சேர அனுமதி சீட்டு கொடுத்து பணம் கட்டச் சொன்னார் முதல்வர்.
தந்தை முதல்வருக்கு நன்றி கூறினார்.
அன்பழகனுக்கு பெரிய அறிவு வெளிச்சம் கிடைத்தது போலிருந்தது.
கோவிந்தராம்