இந்தி நடிகர் – பாடகர் : பர்ஹானை தெலுங்கில் பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பிரபல இந்தி நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழியில் – தெலுங்கில் ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர்.

மகேஷ் பாபு நடிப்பில் ‘பாரத் அனே நேனு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘I Dont Know…’ எனத் தொடங்கும் பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அவரைத் தொடர்பு கொண்டேன். பாடலுக்கான மெட்டை நான் உருவாக்கும் போதே இந்த பாடலை அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன். அவரைத் தொடர்பு கொண்ட போது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்த பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக் கொடுத்தார்’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார் தேவிஸ்ரீ பிரசாத்.

கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.