ஷூட்டிங், எடிட்டிங் பணிகளை 51 மணிநேரத்தில் முடித்து ‘விஷ்வகுரு’ சினிமா வெளியீடு: மெடிமிக்சின் ஏவிஏ நிறுவனம் கின்னஸ் சாதனை

சென்னை, ஏப். 4–
மெடிமிக்ஸ் சோப் குரூப் ஏவிஏ சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘விஷ்வகுரு’ இது உலகிலேய மிக விரைவாக எடுக்கப்பட்ட படம்.
கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப் பணிகள் முடிந்து ஷூட்டிங் முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் முடித்து புதிய கின்னஸ் சாதனையைப்
படைத்திருக்கிறது ‘விஷ்வகுரு’ திரைப்படம்.
மெடிமிக்ஸ் குரூப் ஏவிஏ ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் ஏ.வி.அனுப் தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘விஷ்வகுரு’ இப்படத்தின் மூலம் ஏ.வி. அனுப் மற்றும் அப்படத்தின் இயக்குனர் விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப் பணிகளையும் சூட்டிங், எடிட்டிங், சென்சார் அனைத்தையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். இதனால் உலகிலேயே வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையைப் ‘விஷ்வகுரு’ படைத்திருக்கிறது.
‘விஷ்வகுரு’ படமானது, இந்தியாவில் மாபெரும் சமூகச் சீர்திருத்தங்களை கொண்டு வரக்காரணமாக இருந்தவரும், கேரளாவில் மதம், ஜாதிகளை எல்லாம் தாண்டி மாபெரும் சமூகச் சீர்திருத்தங்களை கொண்டுவந்து, ஆன்மீக சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்கிய ‘ஸ்ரீ நாராயண குரு’வின் வாழ்க்கையைக் காட்டும் திரைப்படமாகும்.
இதற்கு முன்பு ‘மங்களகமனா’ இலங்கை திரைப்படம். 71 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. வெறும் 51 மணி நேரம் மற்றும் 2 நிமிடங்களில் ‘விஷ்வகுரு’ திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், உலகில் மிக வேகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது.
இப்படத்தின் எழுத்தாளர் ப்ரமோத் பையனூர் எழுத்துப் பணிகளை 2017ம் வருடம் டிசம்பர் 27ந் தேதியன்று முழுமையாக எழுதி முடித்த இரண்டு நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டு, அதாவது 2017ம் வருடம் டிசம்பர் 29ந் தேதியன்று திருவனந்தபுரத்திலுள்ள ‘நிலா திரையரங்கில்’ காலை 11.30 மணிக்கு திரையிடப்பட்டது. ‘விஷ்வகுரு’ திரைப்படத்தின் ஷூட்டிங் மட்டுமின்றி, படத்தலைப்பு முன்பதிவு, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள், சுவரொட்டிகளுக்கான வடிவமைப்பு, விளம்பரங்கள் மற்றும் தணிக்கை முதல் அனைத்துப் பணிகளும் இந்த மிகக் குறைவான மணி நேரங்களுக்காகவே முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.