‘ரங்கஸ்தலம்’ படத்தில் பாடல் காட்சியில் தவறான வார்த்தையை நீக்க யாதவ மகாசபை கோரிக்கை

சென்னை, மார்ச். 30–

அகில இந்திய யாதவ மகா சபை நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள யாதவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து யாதவ மக்கள் நலனுக்கும் தேச ஒற்றுமைக்கும் பாடுபடுகிறது. பாமரமக்களுக்கு கல்வி உதவி திட்டங்களை வழங்குகிறது. இது யாதவ மகளிரை இழிவு படுத்தும் பாடலில் தவறான வார்த்தையை நீக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது என்று அகில இந்திய யாதவ மகா சபையின் மாநில பொதுச் செயலாளர் கே. நீல முரளி யாதவ் தெரிவித்தார்.

அகிய இந்தியா யாதவ மகா சபையிலன் சார்பில் நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், தெலுங்கு மற்றும் இதர மொழிகளில் வெளிவரவுள்ள ‘ரங்கஸ்தலம்’ என்னும் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ‘‘கொல்லாபாமா’’ என்ற வார்த்தையை அகற்ற வேண்டும். மேலும் வரிகள் சரித்திர மற்றும் பாரம்பரிய யாதவ பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சரித்திர சான்றுகள் மூலம் அறிவது என்னவென்றால், ஒவ்வொரு தருணத்திலும் யாதவ பெண்கள் இழிவுப்படுத்தினாலோ அல்லது தவறாக பேசினாலோ அகில இந்திய யாதவ மகா சபை தங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ‘‘கொல்லாபாமா’ என்ற வார்த்தையை நீக்காவிட்டால் யாதவர் அனைவரும் ஒன்று திரண்டு உண்ணாவிரதம் போன்ற அறவழிப் போராட்டங்கள் நடத்துவோம் என்று அகில இந்திய யாதவ மகா சபை சார்பில் இதன் மாநில பொதுச் செயலாளர் கே. நீல முரளி யாதவர் தெரிவித்துள்ளார்.