சென்னையில் 3 நாட்கள் மெக்சிகோ பட விழா

சென்னை:-

புதுடெல்லி மெக்சிகோ தூதரகம், சென்னையில் உள்ள மெக்சிகோ கவுரவ தூதர் அலுவலகம், இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் ஆகிய மூன்றும் இணைந்து சென்னையில் மெக்சிகோ பட விழாவை நடத்தின.

விழாவை தூதரக கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் தலைவர் சாண்டியாகோ ரூ சான்செஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் சென்னையில் உள்ள கவுரவ கான்சல் ராம்குமார் வரதராஜன், நடிகை அதிதி பாலன், பவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள். மூன்று நாள் படவிழா இன்றோடு முடிகிறது.