ஸ்ரீதேவி உருவப்படம்: விஜி சந்தோஷம் திறந்தார்

மறைந்த திரைப்பட நடிகை ஸ்ரீ தேவி படத் திறப்பும், மகளிர் தின விழாவும் சென்னை நவின்பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்ரீ தேவிபைன் ஆர்ட்ஸ் சார்பாக தியாகராய நகர் பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நவின் பன்னீர்செல்வம் வரவேற்றார். க.குமார் தலைமையில் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் முன்னிலையில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஸ்ரீதேவியின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.

விழாவில் இசை அமைப்பாளர் ஜீவாவர்சினி, நடிகை அனுகிருஷ்ணா, ஜீவி பாஸ்கர், நடிகர் செல்வம், ஓவியர் கீதா, சமூக சேவகர்கள் விருது பெற்றனர்.

விழாவில் நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்பட பாடல்களை சங்கர் கணேஷ் தலைமையில் ஜிவரா ஜாஸ்ருதி குழுவினர் இசைத்தனர். கலைசெல்வம் கடையம் ராஜி தொகுத்து வழங்கினார்.