காவிரி ஆற்றுப்படுகையில் அழிந்துவிட்ட ‘உளிரி’ மீன் இனம்: முழுநீள தமிழ் சினிமா!

காவிரி ஆற்றுப்படுகையில் அழிந்துவிட்ட ‘உளிரி’ என்னும் மீன் இனம் பற்றி முழு நீள சினிமா ஒன்றை இளம் இயக்குனர் ஆர்.ஜெயகாந்தன் தயாரித்து வருகிறார்.
ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் இது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “ உளிரி “ எனும் மீன் இனமே இன்று அழிக்கப் பட்டு விட்டது.
அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப் பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படு
கிறது.
நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரியை’ என்று ஜெயகாந்தன் தெரிவித்தார்.
படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
சுரேஷ் கதாநாயகன். கதாநாயகி சயனி. பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு :- வெங்கட், எடிட்டிங் :- சுரேஷ் அர்ஸ், கலை -: சாமி கலைக்குமார், ஸ்டன்ட் -: மெட்ரோ மகேஷ், நடனம் -: மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை : ஏ. நாகராஜ், தயாரிப்பு: – எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ், எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை -: ஆர்.ஜெயகாந்தன்