69% வாக்குகள் பெற்று மீண்டும் ரஷ்ய அதிபராவார் புடின்

மாஸ்கோ, மார்ச். 13–

69% வாக்குகள் பெற்று ரஷ்ய அதிபராக விளாதிமீர் புடின் மீண்டும் பொறுப்பேற்பார் என்று ரஷ்ய மக்களிடம் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

புடினின் தனிப்பட்ட குணாதிசயங்கள் அவரது நடத்தை தான். ரஷ்ய மக்களிடம் அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்கை உருவாக்கித் தந்துள்ளது. மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர் அவர் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதால் 69% வாக்குகளை அவர் பெறுவது திண்ணம். பெரிய அளவில் பெரும்பான்மை பலத்தோடு அவர் வெற்றி பெறுவார் என்று அந்தத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புடினின் கொள்கை என்ன, செயல் திட்டம் என்ன, அவற்றை அவர் எப்படிச் செயல்படுத்துவார் என்பது அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்குத் தெரியும் என்று அந்த ஆய்வு மேலும் கூறியது.

வறுமையை ஒழிப்பேன், அதை ஒழிப்பது எப்படி என்பதை அறிவேன் அதற்கான செயல்திட்டத்தை செயல்படுத்துவேன் என்று இம்மாதத் துவக்கத்தில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தெளிவுபடக் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான போட்டியில் களத்தில் இருக்கும் மற்ற 7 வேட்பாளர்களுடன் டெலிவிஷனில் ஒரே மேடையில் தோன்றி விவாதிக்க புடின் மறுத்துவிட்டார்.

புடினுக்கு அடுத்த இடத்தில் 2வதாக பவேல் க்ருடினின் வெற்றி பெறுவார் என்று அந்த ஆய்வுத் தகவல் மேலும் கூறியது. இவருக்கு அதிகபட்சம் 8% ஓட்டுக்களும், டெலிவிஷன் புகழ் சேனியா சோபெகாக் 2% ஓட்டுக்களும் கிடைக்கும் என்றும் தகவல் கூறியது. மற்ற வேட்பாளர்களுக்கு 1% அல்லது அதற்குக் கீழாகத்தான் ஓட்டுக்கள் விழும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. தகுதி வாய்ந்த வாக்காளர்களில் 63% முதல் 67% வரை இந்தத் தேர்தலில் பங்கேற்பார்கள்.

1990ல் அரசியல் மற்றும் பொருளாதார குாப்ப நிலை ரஷ்யாவில் நிலவி வந்த சூழ்நிலையை மாற்றி அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரு துறையிலும் ஸ்திரத்தன்மையை உருவாக்கியவர் விளாதிமீர் புடின் என்பது குறிப்பிடத்தக்கது.