தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் எளிமையான வீட்டு சிகிச்சைகள்–2

ஆப்பிள் சீடர் வினிகர், இந்த வினிகர் உங்கள் தலைச்சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்தும். முடி வளர்ச்சியை வேகப்படுத்த, முடியின் PH சமநிலையை பராமரித்திடும். பயன்படுத்தும் முறை: முதலில் கூந்தலை ஷாம்பு போட்டு நீரில் நன்கு அலசவும். இறுதியில் அலசும் போது ஆப்பிள் சிடர் வினீகரை பயன்படுத்தவும். இதனால் ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான கூந்தலைப் பெறலாம்.

1 லிட்டர் சொல்யூஷன் என்றால் 1 லிட்டர் தண்ணீருடன் 75 மி.லி. ஆப்பிள் சிடர் வினீகரை கலந்து கொள்ளுங்கள். இதனை சின்ன சின்ன டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். சிறிய அளவில் தயார் செய்ய வேண்டுமானால், 15 மி.லி. ஆப்பிள் சிடர் வினீகரை வெதுவெதுப்பான 1 கப் நீரில் கலந்திடவும். கூந்தலை கழுவிய பின்பு, இந்த கப்பை கடைசி முறை அலச பயன்படுத்துங்கள்.

முட்டை மாஸ்க் உலகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கலாச்சாரங்களால், சிறிய மாற்றங்களுடன், பின்பற்றப்படும் வீட்டு சிகிச்சை இது. இதில் அதிக அளவிலான புரதங்கள் உள்ளதால் புதிய முடி உருவாவதற்கு உதவிடும். மேலும் சல்ஃபர், ஜிங்க், இரும்பு, செலீனியம், பொட்டாசியம் மற்றும் ஐயோடின் ஆகியவைகளும் இதில் வளமையாக உள்ளது.

பயன்படுத்தும் முறை: ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலந்திடவும். வழுவழுப்பான பேஸ்ட் உருவாகும் வகையில் அதனை நன்றாக கலந்திடவும். இதனை தலை முடி முழுவதும் கவனமாக தடவுங்கள். பின் அதை அப்படியே ஒரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலை முடியை அலசிய பின்பு ஷாம்பு போட்டு குளித்திடுங்கள்.

பூண்டு

முடி உதிர்வை குறைப்பதற்கு மிக பரவலாக பயன்படுத்தப்படும் வீட்டு சிகிச்சை தான் பூண்டு. புதிய முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பயன்படுத்தும் முறை: நசுக்கிய பூண்டு சிலவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இதனை முடியின் வேர்களில் நன்றாக தடவவும். தலையை நன்றாக கழுவுங்கள். நல்ல பலனைப் பெற இந்த சிகிச்சையை வாரம் மூன்று முறை பயன்படுத்தவும்.