டி20 கிரிக்கெட்: இந்தியா வெற்றி

முத்தரப்பு டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றது.

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரில் இந்தியா -–இலங்கை இடையிலான இரண்டாவது ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 19 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் சர்துல் தாகுர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், உனத்கட், சஹால், விஜய்சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இறுதியில், இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 42 ரன்களும், தினேஷ் கார்த்திக் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சர்துல் தாகுர் வென்றார்.