கோவாவில் தூத்சாகர் : நினைவில் நிற்கும் நீர்வீழ்ச்சி

கோவா – யூனியன் பிரதேசத்தில் உள்ளது தூத்சாகர் நீர்வீழ்ச்சி. அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்களில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 1017 அடி உயரத்தில் அமைந்துள்ளது.   

இன்னொரு சுற்றுலா இடம் சஹ்யாத்ரி வாசனை திரவியங்கள் – நறுமணப் பொருட்கள் பண்ணை. கோவாவின் பெருமைக்குரிய இடம் இது. இங்கு கிடைக்கும் வாசனை திரவியங்கள் – நறுமணப் பொருட்கள் என்னென்ன என்பதையும், அவற்றின் மருத்துவக் குணங்களையும் அறிந்து கொள்ளலாம்.

கோவா ஸ்டைலில் ‘பப்பே’ விருந்து, இங்கே மறக்க முடியாத ஒன்று. பார்த்த மாத்திரத்தில் நாவில் நீர் வரவழைக்கும் உணவு வகைகள், ருசியானவை.

340 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பண்ணை விரிந்து பரந்துள்ளது. இந்தப் பண்ணையில் ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நறுமணப் பொருட்கள் பண்ணையைப் பார்க்கும் வாய்ப்பும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும். பகவான் மாகவீர் வனவிலங்கு சரணாலயம்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் 240 சதுர கி.மீ. பரப்பில் இந்த வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

கோவாவில் பராமரிக்கப்படும் வனவிலங்குகளில் பெரும் எண்ணிக்கை இந்த சரணாலயத்தில் உள்ளன. தூத்சாகர் நீர்வீழ்ச்சி, டெவில்ஸ் கானியான், தாம்ப்டி சுர்லா கோவில், தம்ப்டி நீர்வீழ்ச்சி மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், மத சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களை இங்கே காணலாம்.

தூத்சாகர் நீர்வீழபுச்சிக்கு மிக அருகாமையில் இருப்பது குலேம் ரெயில் நிலையம். கோவாவிலிருந்து குலேம் மோல்லெம் (6.கி.மீ) தூத்சாகர் நீர்வீழ்ச்சி ரெயில் மூலம் இப்பகுதியை வந்தடையலாம்.

ஒரு நாளைக்கு 2 ரெயில்கள் விடப்படுகிறது. இரண்டும் தூத்சாகரில் நிற்கும். அமராவதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் போது, தூத்சாகர் நீர்வீழ்ச்சி பாதை கண்கொள்ளா காட்சியாகும்.