விவாகரத்து கடைசித் தீர்வாக இருக்கட்டும்; சரியான வரன் கிடைப்பது குதிரைக் கொம்பு…!

துவரை 1 லட்சத்துக்கும் அதிகமான திருமண பொருத்தம் பார்த்து, திருமணத்தில் வெற்றி கண்டுள்ளது சென்னை சாய்சங்கரா மேட்ரிமோனியல்ஸ். இது, அசோக் நகர் அரசு மகளிர் பள்ளி அருகில் 28 ஆண்டு பாரம்பரியத்துடன் செயல்பட்டு வருகிறது. இது பிராமணர்களுக்கான திருமண தகவல் மையமாக விளங்குகிறது. இந்தக் காலத்தில் சரியான வரன் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. காரணம் தேவையில்லாமல் ஜாதக பொருத்தம் பார்ப்பது, பெண்கள் அதிக வரனை நிராகரிப்பது போன்றவை திருமணத்தை தாமதப்படுத்துகிறது. திருமண பொருத்தம் பார்ப்பது சரியான வயதில் துவங்க வேண்டும். திருமணம், நிச்சயதார்தத்துக்கு ஆடம்பரமாக செலவு செய்வதை குறைக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் நாள், நட்சத்திரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டுமென்று சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் என்.பஞ்சாபகேசன் தெரிவித்தார்.   

என்.பஞ்சாபகேசன், இவர் தான் ‘மக்கள் குரலின்’ இன்றைய சிறப்பு விருந்தினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பணியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நிறுவனம், அதன் செயல்பாடுகள் பற்றி அவர் கூறியதாவது:–

‘‘சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் பிராமணர்களுக்காக குறைந்தபட்ச கட்டணத்துடன் செயல்படுகிறது. சென்னை சாய் முருகா மேட்ரிமோனியல், அனைத்து ஜாதிகளுக்கும் திருமண பொருத்தம் செய்கிறது. இதற்கு கட்டணம் இலவசம். அனைத்து ஜாதி மாற்றுத்திறனாளிகளுக்கும் திருமண பொருதத்தை சென்னை சாய் துணை மேட்ரிமோனியல்ஸ் மூலம் இலவசமாக ஏற்பாடு செய்கிறது.

ஒருவருக்கு வாழ்க்கையில் கல்வி, வேலை, மருத்துவ சிகிச்சை தேவை போல, குறித்த காலத்தில் திருமணமும் நடைபெறவேண்டும். இதனால் வாழ்வு வளமாக அமையும்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் முக்கிய திருப்புமுனையாக அமைகிறது.

திருமணத்தில் காதல் திருமணம், வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணம் என இருந்தாலும் பெரும்பாலும் அனைவரும் வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தை விரும்புகின்றனர்.

சரியான வரனை பார்க்க பெண்ணும், பையனும் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பையன்களுக்கு வரன் பார்ப்பது கடினமாக உள்ளது.

1 லட்சத்துக்கு அதிகமான திருமணங்கள்

திருமண தகவல் நிலையம், திருமண பொருத்த நிறுவனங்கள், திருமணத்துக்கு உதவுகின்றன.

இத்துறையில் சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல் 28 ஆண்டு பாரம்பரிய நிறுவனமாக 1 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்களை நடத்தி சாதனை புரிந்துள்ளது.

தஞ்சாவூரில் 1990ம் ஆண்டில் ஸ்ரீ சாய் ஜாதக பரிமாற்ற மையமாக செயல்பட்ட இந்நிறுவனம், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அருளால், சென்னைக்கு வந்து தற்போது அசோக் நகரில் அரசு மகளிர் பள்ளி அருகில் எண்.7, 9வது அவின்யூ, அசோக்நகர், சென்னை–83 என்ற முகவரியில் செயல்படுகிறது. இது பற்றி www.ssmatri.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

திருமணப் பொருத்தம் துறையில் திருமண தகவல் நிலையம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் 3 ரகமாக செயல்படுகிறது. இதில் ஒன்று பிராமணர்களுக்காகவும் மற்றொன்று இதர இந்து ஜாதி மக்களுக்காகவும், .அடுத்து அனைத்து ஜாதி ஊனமுற்றவர்களுக்காகவும் www.saimurugamatri.com செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிக்கு www.saithunaimatri.com வலைதளம் உதவுகிறது. நிறுவனம் துவங்கியதிலிருந்து இம்மாதம் வரை 1 லட்சம் பேருக்கு திருமண பொருத்தம் செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியலுக்கு மட்டும் குறைந்த அளவாக கட்டணம் வசூலிக்கிறது. இதர 2 திருமண பொருத்தம் பிரிவு இலவசமாக வழங்கப்படுகிறது.

பாதுகாப்பான தகவல்

இந்த திருமண பெருத்தத்தில் ஸ்ரீ சாய் சங்கரா வித்தியாசமாக செயல்படுகிறது. திருமண வரன் பற்றிய முழு தகவல் படத்துடன் வழங்குவதில் இந்நிறுவனம் சிறந்ததாக விளங்குகிறது. இதனால் பலர் ஆர்வத்துடன் தகவல்களை பரிமாறுகின்றனர். எங்கள் நிறுவனம் மட்டுமே விண்ணப்பதாரர் படம் போன்றவற்றுடன், கையொப்பமும் வாங்குவதால் போலியான தகவல் இருக்காது.

கம்ப்யூட்டர் பற்றிய அறிவு இல்லாதவரும் நேரில் இதில் பதிவு செய்யலாம். நேரில் வரமுடியாதவர்கள், ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். நேரில் வந்தும், தபாலில் அனுப்பு பதியலாம்.

6 மாதத்துக்கு ஒரு முறை தகவல் புதுப்பிப்பு     

எங்கள் திருமண தகவல் மையத்தில் அவ்வப்போது பெறப்படும் பொருத்த தகவல்கள் பதிவு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒரு முறை தகவல்கள் புதுப்பிக்கப்படுகிறது. திருமண வரன்களின் தகவல் உடனுக்குடன் அகற்றப்படுகிறது.

சாய்சங்கரா மேட்ரிமோனியல்ஸ் வாருங்கள். ராசியான துணையை தேடி இல்வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

இது பற்றி www.ssmatri.com வலைதளத்தைப் பார்க்கலாம். மேலும் 98403 30531 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

கலப்பு திருமணம்

கலப்பு திருமணம் பற்றி பேசுகையில், திருமணம் இருவரை இணைப்பது மட்டுமின்றி இரு குடும்பத்தை இணைக்கிறது. எனவே ஒரே ஜாதியில் திருமண பொருத்தம் செய்வதுதான் எளிதானது. பிரச்சனை இல்லாதது. பல கலப்பு திருமணங்களில் இந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளின் திருமணத்தின்போது வரன் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர் என்றார் பஞ்சாபகேசன்.

 

ஆடம்பரம் தவிர்க்கவும்

‘‘திருமணங்கள், நிச்சயதார்த்தம், போன்றவற்றில் ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். இதேபோல விவாகரத்து என்பது கடைசி தீர்வாக இருக்க வேண்டும். சின்னச்சின்ன பிரச்சனைக்கு விவாகரத்து செய்யக்கூடாது.

இதேபோல ஒவ்வொரு திருமண நடவடிக்கைக்கும் நேரம், நாள், நட்சத்திரம், பார்பதை தவிர்க்க வேண்டும்’’ என்றும் அறிவுரை கூறுகிறார் பஞ்சாபகேசன்.