சியோமி ஸ்மார்ட் டிவிக்கு போட்டியாகும் வு டிவி

புதுடெல்லி,மார்ச்.12–

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் Mi டிவி 4 மாடலுக்கு போட்டியாக வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. சியோமி நிறுவனம் கடந்த மாதம் Mi டிவி 4 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து, பின் சில தினங்களுக்கு முன் Mi டிவி 4A மாடலையும் அறிமுகம் செய்தது. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை விட குறைவான விலையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் Mi ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக வு டெலிவிஷன்ஸ் தனது டிவி மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது.

மார்ச் 13-ம் தேதி வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவி சார்ந்த புதிய தொலைகாட்சியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பெங்களூருவில் நடைபெற இருக்கும் அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்களை வு டெலிவிஷன்ஸ் வெளியிட்டிருக்கிறது.

அழைப்பிதழில் ஓ.கே கூகுள், லெட்ஸ் வு (Okay Google, Let’s Vu) என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதால் புதிய தொலைகாட்சி ஆண்ட்ராய்டு சார்ந்தது என தெரியவந்துள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட் தொலைகாட்சியை வு டெலிவிஷன் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய வு ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை சியோமி டிவி மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 14-ம் தேதி சியோமி நிறுவனம் 55 இன்ச் 4K HDR Mi டிவி மாடலை ரூ.39,999 விலையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே வாரத்தில் மலிவு விலையில் இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது. Mi டிவி 4 மற்றும் Mi டிவி 4A பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்கள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.22,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த யூசர் இன்டர்பேஸ் பேட்ச்வால் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை 43 இன்ச் Mi டிவி 4A மாடலில் வைபை, 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 3 யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஈத்தர்நெட் போர்ட் ஒரு AV கம்போனன்ட் போர்ட், ஒரு S/PDIF ஆடியோ போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

32 இன்ச் மாடலில் இரண்டு யு.எஸ்.பி. 2.0 போர்ட், வைபை, 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 3 யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஈத்தர்நெட் போர்ட் ஒரு AV கம்போனன்ட் போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. Mi டிவி 4A மாடலில் 11 பட்டன் கொண்ட Mi ரிமோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு செட்டாப் பாக்ஸ் மற்றும் தொலைகாட்சி உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும்.