புதிய நாகரிகம்

மண்ணின் பெருமையை நிலை நாட்ட வேண்டுமென்று பூமி பாலன்
அன்று சபதமெடுத்தார் .
மண் வளத்துடன் மனித வளமும் இணைத்தால் பொன்வளமும் கூடும் என்று நம்பி வாழ்க்கையை வாழ முடிவெடுத்தார் அவர்.
ஒருஆரம்ப பள்ளியை ஆரம்பித்தவர் அதை நடுநிலைப்பள்ளியாக மேம்படுத்தினார். தன் ஊர்பள்ளியில் அனைத்து பிள்ளைகளையும் படிக்க வசதி செய்தி கொடுத்தார்.
வானம் பொய்த்தது .வசதியாக வாழ நினைத்தவர்கள் நகரத்திற்கு நகரச் சென்றனர். சிலர் நிலத்தையும் விற்க முடிவெடுத்த போது மறைந்த தன் அன்னையின் நகைகள் விற்று அந்த நிலத்தை வாங்கி முடித்தார். சிறிது நாளில் ஊர் நிலம் யாவும் அவர்சொந்த மாகியது . அதன் பலன் அன்னையின் நகைகளும் மனைவியின் நகைகளும் பூமியாகிப் போனது.
காலத்தின் மாற்றம் வித்தியாசமாகியது. நகரத்திற்குச் சென்றவர்கள் செயற்கையாக வாழ ஆரம்பித்தார்கள். முறையின்றி வாழ ஆரம்பித்தார்கள். நீதி நேர்மை ஒழுக்கம் பண்பாடு, பாரம்பரியம் எல்லாமே சொல்லில் இருந்தது. செயல்கள் யாவும் அவர்களின் இஷ்டத்திற்கு மாறியது.
ஆடம்பரம் வெளிநாட்டு மோகம் உலக மயம் எல்லாம் அவர்களின் வாழ்க்கைத்தரமானது. சுகாதாரமற்ற வாழ்க்கைச் சூழ்நிலை கொசுவைக்கூட ஒழிக்க முடியாமல் விட்டிற்குள் கொசு வராமலிருக்க காற்று வரும் ஜன்னல்கலைக்கூட அடைத்துக் குளிர் சாதனம் அமைத்து செயற்கை காற்றை சுவாசிக்க ஆரம்பித்தனர்.
செயற்கைச் சூழ்நிலையில் வீடுகளைக் கட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள். பாரம்பரிய கட்டிட இலக்கணத்தையே புறந்தள்ளி, கட்டிடத்தின் நான்கு பக்கமும் போதிய இடம் விடாமல் கட்டிடம் கட்டிக் கொணடார்கள். இடம் விடாமல் கட்டிடம் கட்டியதற்கு முக்கிய காரணம் நிலத்தின் விலை கூடியது தான்.
கிராமத்தில் வாழ்ந்த போது வங்கியில் சேமித்த நிலைமாறி நகரத்தில் வங்கியில் கடன் பெறும் நிலை வந்து விட்டது. வருமானத்தின் ஒரு பகுதி சேமிப்பிற்கு பதிலாக வட்டி கட்டும் நிலை ஏற்பட்டது. கிராமத்தில் தங்க நகை அணிந்து மகிழ்ந்தவர்கள் நகரத்தில் கவரிங் நகை அணிந்து மகிழ்ந்தார்கள்.
கலாசாரம், நாகரீகம் கல்வியில் பெரும் மாற்றம் அடைய ஆரம்பித்தது கொள்ளையடித்த அரசியல் வாதிகள் ஆங்கில முறைப்பள்ளிகளை துவக்கினர். வசதி படைத்தவர்கள் தாய் மொழியை கேவலமாக நினைத்து ஆங்கில மோகம் கொண்டு தேசமொழியையும் மறந்து ஆங்கிலப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பதைப் பெருமையாக நினைக்க ஆரம்பித்தனர்.
மக்களின் ஆங்கில ஆதிக்கத்தை உணர்ந்து கல்விக் கொள்ளையர்கள் சர்வதேசப்பள்ளி உலகமயப் பள்ளிகள் என்று ஆரம்பித்தனர். கள்ள ச் சந்தை வியாபாரிகள், லஞ்சம் பெறும் அலுவலர்கள், அறியாய வட்டி வாங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளிப் போட்டி போட்டு அந்த மாதிரி ஆங்கிலப் பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர்.
வசதியில்லாதவர் அந்த பள்ளியில் தம் பிள்ளைகளை சேர்க்க முடியவில்லையே என்று ஆதங்கம் கொண்டனர். அப்படி என்ன சிறப்பு அந்தப் பள்ளிகள் குளிர்சாதனப் பேருந்து குளிர் சாதனப் பள்ளி வகுப்பறை உணவுக்கூட்டம் என்று எல்லாமே செயற்கை முறையில் கட்டப்பட்டு அதற்குப் பராமரிக்கும் செலவை பேராசை பெற்றோர்களிடம் வசூல் வந்தது.
இதன் பலகை பள்ளி செல்லும் சிறுவர்கள் சுவாசக் கோளாறு சிறுநீரகப் பிரச்சனை உடல் சக்தி இழப்பு நோய் எதிர்ப்பு சக்தி, குறைவு மற்றும் சிலபல அசௌகரியங்களால் மருத்துவம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி கல்விச் செலவுடன் மருத்துவச் செலவும் செய்ய வேண்டியநிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்பட்டனர்.
பெண்பிள்ளைகள் இளம் வயதிலேயே வயசுக்கு வந்தனர். ஆண் பிள்ளைகள் பதினைந்து வயதுக்கு முன்னமேயே பாலியல் உறவு பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தனர். இதனால் இளம் வயதில் ஒழுக்கம் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகள் அவர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தனர்.
இந்தப் பிள்ளைகள் நகர சூழ்நிலையில் வளர்ந்ததால் விவசாயத்தைப் பற்றிய அறிவே இல்லாமல் போயிற்று உணவுப் பொருட்கள் யாவும் பெரும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி கவர்ச்சிகரமான பொட்டலங்களில் வருவது தான் தெரிந்தது. அது ஆரோக்கியமான உணவா என்று அறியாமல் செயற்கை வர்ணங்கள், ரசாயனங்கள், சுவை கூட்டிகள் கலந்து உணவை உண்பதில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகியது.
இதனால் கிராமத்தில் படித்தவர்கள் கூட விவசாயம் பார்க்க விரும்பாமல் நகரத்தில் வெள்ளை சட்டையுடன் கரைபடாமல் ஏதாவது ஒரு வேலைகிடைத்தால் போதும் என்று கிராமத்தை விட்டு நகரங்களுக்கு வாழ வந்து விட்டனர். மேலும் அவர்களின் சந்ததியினர் விவசாயத்தை மறந்து விட்டனர்.
நகரத்தில் வசதியாக வழியில்லாமல் போன வயதானவர் சிலர் கிராமத்தில் விற்கமுடியாமல் இருந்த நிலங்களில் மீண்டும் விவசாயம் செய்ய முற்பட்டனர். விவசாயக் கல்லூரிகளில் படித்தவர்கள் நகரத்தில் யாரிடமும் அடிமை வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் இருந்த விவசாய நிலத்தில் நவீன முறை விவசாயம் செய்து பெரும் லாபம் ஈட்ட ஆரம்பித்தனர்.
நகரத்தில் அதிக சம்பளம் பெற்று அதை விடச் செலவு அதிகமாகிக் கடன் வாங்கி கஷ்டப்பட்டவர்கள் சிலர் கிராம வாழ்க்கையின் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். கிராமத்தில் வேலைக்குப் போனால் வாழ்க்கைச் செலவு குறையும். சுகாதாரமான வாழ்க்கைச் சூழ்நிலை அனுவசியச் செலவுகள் குறைந்து கடன் படாமல் வாழ முடியும் என்று தீர்மானம் செய்து கிராமத்திற்கு வாழப் புறப்பட்டனர்.
பூமிபாலன் திட்டப்படி கிராமம் வாழ வசதியான இடம் என்று அனைவரும் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமன விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்யும் தொழிலே மேன்மையானது என்று முடிவு செய்து கிராமத்திலேயே வாழ முடிவெடுத்தனர். கல்வி என்பது அறிவை வளர்க்கவே என்று அறிந்து விவசாயக்கல்வி கற்க அதிக அளவு ஆர்வம் கொண்டனர்.
மழைநீர் சேகரித்து நீர்ப் படுகையின் ஆழத்தைக் குறையச் செய்து இயற்கை முறையில் விவசாயம் செய்து சக்தி மிக்க உணவு பொருட்களை உற்பத்தி செய்து …..
புதிய நாகரீகம் படைத்து நோயின்றி வாழத் தீர்மானம் செய்தனர்.