மன ஊனம்

அமுதாவின் அம்மா விசாலாட்சியை அவரது பள்ளித் தோழி சகுந்தலா ஒரு நவீன மாலில் சந்தித்தாள்.
இருவரும் அந்தக்கால கல்லூரி நாட்களின் நினைவை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
தோழி சகுந்தலாவிடம்
‘‘பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்’’ என்று கேட்டாள் விசாலாட்சி.
மகனும் மருமகளும் பெங்களுரில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வாரிசாக பேர் சொல்ல ஒரு ஆண் பிள்ளை இருக்கிறது என்றார் சகுந்தலா.
இதே கேள்வியை சகுந்தலா விசாலாட்சியிடம் கேட்டாள்.
என் மகள் சுந்தரிக்கு உடலில் கொஞ்சம் ஊனம் இருந்தாலும் அவளுக்கு மற்ற எல்லாம் நல்ல படியாக ஆண்டவன் கொடுத்து விட்டான். அவள் புருஷன் கடை வைத்திருக்கிறார். சுந்தரி ஒரு கம்பெனியில் பெரிய வேலையில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறாள் என்றாள் விசாலாட்சி. பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பவளுக்கு ஏன் கடை வைத்திருக்கும் மாப்பிள்ளை? நல்ல கம்பெனியில் வேலை பார்க்கிற மாப்பிள்ளை கிடைக்கவில்லையா? என்றாள் சகுந்தலா.
இப்போது சுந்தரி மகிழ்ச்சியாகவே குடும்பம் நடத்துகிறாள். அழகான ஊனமில்லா ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவளை இப்போது தான் பள்ளியில் சேர்த்தார்கள். சுந்தரியையும் குழந்தையும் மாப்பிள்ளை சிவா காலையில் அவளை ஆபீசிலும் இவளை பள்ளியிலும் கொண்டு போய் விட்டுவிடுவார். அதே போல் மாலையில் சரியான நேரத்திற்குச் சென்று வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார் என்று பெருமையாகப் பேசினாள் விசாலாட்சி.
சிவா பேருக்கு ஒரு கடை வைத்திருந்தாரே தவிர வேறு ஏதும் சிறப்பாக செயல்பட மாட்டார். தன் இஷ்டப்படி இஷ்டப்பட்ட நேரத்தில் தான் எல்லா வேலைகளையும் செய்வார். நிரந்தரமாக வருமானம் பார்க்க வேண்டும் என்ற முனைப்பு இல்லாதவர் நேரங்கெட்ட நேரத்தில் தான் சாப்பிடுவார். உருப்படியாக ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டில் தொலைக்காட்சி, கணிப்பொறி என்று அதில் மட்டும் கவனம் கொண்டு வாழும் ஒரு சுகவாசி என்று தான் அவனை செல்ல முடியும்.
சுந்தரியும் வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வெளியில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறேன் என்று பலர் நினைக்கும்படிதான் வாழ்கிறாள். ஒரு நாள் மாலை நேரத்தில் விசாலாட்சியின் தோழி சகுந்தலா தன் மருமகள் உமாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். விசாலாட்சியும் தன் மகள் சுந்தரியை சகுந்தலாவிடமும் உமாவிடமும் அறிமுகம் செய்தாள். சகுந்தலா வெளியில் விசாலாட்சியிடம் பேச, உமா சுந்தரி அறையில் அமர்ந்து பேசினார்கள்.
உமா தன் கணவர் ரமேஷ் ஒரு கணிப்பொறி பட்டதாரி என்றும் தானும் கணிப்பொறி சம்பந்தப்பட்ட பட்டம் பெற்று ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் கூறினாள். பிள்ளையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று சுந்தரி கேட்க, அவனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டோம் என்றாள். ஆனால் உங்கள் மாமியார் உங்களுக்கு நிறைய உதவி செய்வார்கள். குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்று என் மாமியார் சொல்லக் கேட்டிருக்கிறேன் என்றாள்.
அதைக் கேட்ட சுந்தரி என், மாமியார் மிகவும் விவரமானவர், யாரும் பெண் கொடுக்க முன் வராத நேரத்தில் என் பெற்றோர் ஏமாந்து அவரை எனக்கு கட்டி வைத்து விட்டார்கள். என் சோகம் வெளியே சொல்ல முடியாத சோகமும் என்றாள். அப்படி என்ன என்று உமா கேட்டாள். சுந்தரி எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தாள். இதை உங்கள் மனதில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். எப்படி விசாலாட்சி திட்டம் போட்டு இந்தக் கல்யாணத்தை முடித்தாள் என்பது முதல் தற்போது எந்த நிலையில் இருக்கிறேன் என்பதையும் சொன்னாள்.
என்னை ஊனம் என்று சொல்லி கூடுதலாக நகை போடச் சொன்னார்கள். பட்டப் படிப்பையே முழுதாக பாஸ் செய்யாத மகன் முதுநிலைப் பட்டம் பெற்றவர் என்று பொய் சொன்னார்கள் திருமணத்திற்கு பிறகு தான் அவர் ஒரு வேலை பெற தகுதி இல்லாத பட்டதாரி என்று தெரிந்து என் உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் கடை வைக்க வங்கிக் கடன் பெற்றுத் தந்தேன் அந்தக் கடையைக் கூட ஒழுங்காக நிர்வாகம் செய்யத் தெரியாத சோம்பேறி.
எப்படி நீங்கள் குடும்பம் நடத்துகிறீர்கள் என்றாள் உமா. என் கணவர் என் சம்பளத்தை அட்டையை வைத்துத்தான் குடும்பம் நடத்துகிறார். என் செலவுக்குக் கூட ஒரு சிறு தொகையைத்தான் கொடுப்பார். என் பேரில் கடன் பெற்றுத்தான் கார் வாங்கியுள்ளோம். அந்தக் காரை பெருமையா ஓட்டி, தன் பெற்றோரை வெளியே அழைத்துச் செல்வார். என் உடல் ஊனமுற்ற சான்றிதழ் கொண்டு அரசு சலுகைகள் பெறுவார்கள்.
உங்கள் கணவர் ஒரு மனம் ஊனம் அடைந்தவர் உங்கள் மாமியார் தன்மானமுள்ள பிள்ளையை பெறாத உடல் மனம் ஊனமுற்றவர், ஊனமில்லாத மனம் கொண்ட நீங்கள் தான் முழுமையான பிறவி மன ஊனம் அவர் உள்ளார்கள் எல்லாம் ஈன பிறவிகள் என்று சமாதானம் சொன்னாள். பின் விசலாட்சி இருவருக்கும் சிற்றுண்டி தர சாப்பிட்டு விட்டு உமா விசாலாட்சியை ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்து விட்டு விடை பெற்றாள்.
கோவிந்தராம்