மதிய உணவு

அன்று அலுவலகத்தில் இருந்து மதி உணவு இடை வேளைக்கு வெளியில் வந்தேன்.
கையேந்தி பவன்கள் காலியாக இருந்தாலும் ஒரு ஹைஜீனிக் ஓட்டலயே மனசு தேடியது.
“கண்ட கண்ட எடத்தில் ஒடம்புக் கெடுத்துக் கிறாத கொஞ்சமா சாப்பிட்டாலும் நல்ல ஓட்டல்ல சாப்பிடு, வீட்டில் உள்ளவர்கள் சொன்னது அடிக்கடி ஞாபகத்திற்கு வருவதால் குறைவாகச் சாப்பிட்டாலும் அது நல்ல உணவாக இருக்க வேண்டுமென்பதில் பிடிவாதம் இருந்தது. இதனால் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டுமென்பதில் கொஞ்சம் பிடிவாதம் கூடியது எனக்கு. அந்தப்பகுதியின் பிரதான ஓட்டல் ஒன்றிற்குள் நுழைந்தேன்.
நுழைவாயிலில் நுழையும் போதே நெஞ்சம் கனத்து ஐயா ….. ஐயா என்று கூப்பிடும் போது திரும்பினேன்
ஒரு வயதான தாய் அங்கே வறுமைக் கோலத்தில் நின்றிருந்தாள்.
“ஐயா …. ஐயா” என்றாள் அந்தத்தாய்.
“அம்மா சாப்பிடுறீங்களா? இந்த வார்த்தையைக் கேட்ட போது எனக்குள் என்னவோ செய்தது.
“அம்மா” என்று நான் மறுகுரல் எடுத்து போது, அந்தத்தாய்க்குள் கண்ணீர் மறுகியது.
“வாங்கம்மா சாப்பிடுங்க” என்று மேலும் கூப்பிட அந்தத்தாய் அந்த இடத்தைவிட்டு நகராமலே இருந்தாள்.
“அம்மா வாங்கம்மா சாப்பிடப் போகலாம் கைபிடித்துக் கூப்பிட்டேன்
தாரை தாரையாய் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே வேண்டாம் என்று தலையாட்டினார்.
எனக்கு அந்தத் தாய்க்குமான உரையாடலை அந்தப்பகுதியில் போவோர் வருவோர் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.
“இல்லப்பா வேணாம் என்றாள்.
“ஏம்மா”
இல்லப்பா டிரஸ் ஒரு மாதிரியிருக்கு அங்கெல்லாம் பெரிய பெரிய ஆளுகல்லாம் வருவாங்க; சாப்பிடுவாங்க ; நான் இப்படியே போய் ஒக்காந்தா நல்லாயிருக்காது தம்பி. நீங்க போய்ச் சாப்பிடுங்க” அந்த அம்மா சொன்னபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
ஏன் என்னாச்சு?
“இல்ல வேணாமே”
விடாப்படியாகவே அந்த அம்மா சொன்னாள்.
எனக்கு அந்த அம்மாவை விட்டுவிட்டு சாப்பிட மனசே இல்லை.
உள்ளே போகவும் முடியவில்லை சாப்பிடவும் மனசில்லை.
என்மனது கிடந்து அடித்தது.
என்னால் அந்த ஓட்டலுக்குள் சாப்பிடப் போனவே முடியவில்லை.
அழுகையின் அடர்த்தி கூடிய அந்தத் தாய், அந்த இடத்தை விட்டு அப்புறம் நகர்ந்தார்.
“அம்மா ….. அம்மா பின்னாலயே சென்றார். அவர் செவிமடுக்காமல் சென்று கொண்டே இருந்தார்.
என்று சாப்பிடப்போகனும் என்ற எண்ணமே வரவில்லை
ச்சே ஏன் இந்த அம்மா இப்படி போறாங்க ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ குடுத்துட்டு வாரது பெருசா என்ன? நாம சாப்பாடே வாங்கித்தாரேன்னு சொல்றேன்.
இந்த அம்மா கேக்க மாட்டீங்குதே அலையாய் அலைந்தேன்.
அந்த அம்மா என் கண்ணில் தென் படவே இல்லை. அன்றைய மதிய உணவை என்னால் சாப்பிட முடியவில்லை.
சேர்ந்து போய் அலுவலகம் வந்தேன் . அன்று முழுவதம் எனக்கு சிந்தனைகள் ஒரே இடத்தில் இல்லை சுழன்றுகொண்டே இருந்தன.
“என்ன இது யாரோ ஒரு அம்மாவுக்காக என்னோட ஒரு அம்மாவுக்காக என்னோட மனசு இப்பிடி அடிச்சுக்கிறதே. இது ஒரு விதமான உளவியல் பிரச்சினையா இருக்கும் போல இல்லையே எவ்வளவோ பேரக் கடந்து போறோம், எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். ஆனா இப்பிடியொரு பிரச்சினை நடக்கு வந்ததில்லையே மனசு கிடந்து மறுகியது.
“என்ன தம்பி, மதியம் சாப்பாட்டுக்கு போயிட்டு வந்ததில இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க என்று கேட்டார்.
உடன் வேலை செய்யும் நண்பர்
“இல்லையே”
ஏன் தம்பி பொய் சொல்றீங்க . அதான் ஒங்களோட மூஞ்சியே காட்டிக் குடுக்குதே என்றார் மேலும்.
தேதி பத்தாச்சு இன்னும் அம்மாவுக்கு பணம் அனுப்பலயில்ல என்று உடன் வேலை செய்யும் இன்னொரு நபர் சொல்லும் போது எனக்கு சரீரென்று உறைத்தது.
ஆமா நாமளும் அம்மாவுக்கு பணம் அனுப்பலியே ” ஒரு வேல, நாம ஒட்டல்ல பாத்த அம்மா மாதிரியே, பணம் இல்லாம நம்ம அம்மாவும் இப்படித்தான் நின்னுட்டு இருக்குமோ?
ஊருக்குப் போகும் போது அம்மாவுடன் வீராப்பாய்ச் சண்டை போட்டு விட்டு வந்திட்டோம் . இப்ப காசில்லாம சாப்பாட்டுக்கு என்ன பாடுபடுமோ? என்ற எண்ணம் புயலாய்ச் சுழல, காலை விடிந்ததும் வங்கிக்கு ஓடிப் போய் அம்மாவின் கணக்கில் பணத்தை வரவு வைத்தேன்.