தமிழச்சி

தேவி, சோகமாகவே உட்கார்ந்திருந்தாள் அவள் முகம் முழுவதும் கண்ணீரால் நனைந்த நிறைந்தது. அவளின் பார்வை மட்டும் நிலை குத்தி நின்றிருந்தன.
விஜி, அவள் அருகே வந்தான்.
“தேவி, ….. தேவி,….. அவளைக் கூப்பிட்டுப்பார்த்தும் அவளின் கவனம் முழுவதும் எங்கயோ இருந்தது.
தேவி, ….. தேவி “மீண்டும் கூப்பிட அவள் மெல்ல விஜியைத் திருப்பிப் பார்த்தாள்
“ஏன் இப்படி ஒக்காந்திருக்கீங்க?
“ஒண்ணுல்ல” என்பது போல் தலையை மட்டும் ஆட்டினாள்.
“சும்மா சொல்லுங்க” ஏன் இப்படி ஒக்காந்திருக்கீங்க.
ஏன் நீங்க என்ன பண்ணப் போறீங்க? எதிர் கேள்வி கேட்டாள்.
இல்ல நீங்க எப்பவும் இப்படி இருக்க மாட்டீங்களே அதான்.
“எனக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும் அத ஏன் நீங்க கேக்குறீங்க
ஒங்க வேளயபாத்திட்டுப் போங்க சார் விரட்டினாள்.
“சும்மா சொல்லுங்க தேவி”
“சொல்லணுமா?
“ம்”
சொல்லித்தான் ஆகணுமா?
“ஆமா”
“வீட்டு வாடக குடுக்கல, சிலிண்டர் தீந்து போச்சு என்ன பண்ணப் போறீங்க சுரீரென்று சொன்னாள்.
“விஜிக்கு வியர்த்தே விட்டது.
தேவி”
சொல்லுங்க”
நான் வேணும்னா, அந்த வாடகை பணம் சிலிண்டருக்கு குடுக்கவா?
“தேவி விஜியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
“ஏன் வேணாமா”
“தேவியின் பார்வை விஜியை விட்டு கீழே இறங்கவே இல்லை
ஏய் தேவி, ஏன் அப்படிப் பாக்குறீங்க?
தேவியின் கண்களிலிருந்து ஏதும் தப்பா கேட்டுட்டனா?
அதற்கும் அவளிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை
தேவி, பேச மாட்டீங்கிறீங்களே நான், ஏதாவது தப்பா கேட்டுட்டனா
அப்பவும் அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் நின்றபாடில்லை அவளின் உதடுகள் தந்தியடித்தன
ஏய். தேவி விஜி கூப்பட்ட போது மேலும் மேலும் அவள் தேம்ப ஆரம்பித்தாள். பதில் வரவே இல்லை.
அப்படியென்ன நான் தப்பா கேட்டுட்டேன் நீங்க கஷ்டப்படுறீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்றது தப்பில்லையே விஜி மீண்டும் விவரம் சொன்னான்.
“ஓகோ. நான் கஷ்டப்படுறனா கடகடவெனச் சிரித்தாள்.
ஆமா நீங்க தான சொன்னீங்க . வீட்டு வாடகை சிலிண்டர் இல்லன்னு அதான் நீங்க கேட்டீங்க நான். சொன்னேன் அவ்வளவு தான்.
அதுக்காக நீங்க எனக்கு பணம் தரணும்னு அவசியமில்ல. கொஞ்சம் முறைப்பாகவே சொன்னாள்.
“ஏங்க ஒரு உதவி ” இழுத்தான், விஜி
“ஓகே உதவி “ஹலோ விஜி ஒங்களோட பரிவு, பச்சாதாபம் எனக்கு தேவையில்ல
“ஏங்க கஷ்டப்படுறீங்க?
ரொம்ப ஏறக்கப் படுவீங்க போல
“ஆமாங்க’’
“ம்” எவ்வளவு நாளைக்கு விஜி இந்த மாசம் நீ குடுப்ப, அப்பெறம்?
இந்த கஷ்டம் பிரச்சனை கவல துன்பம், துயரம் எல்லாம் நான் பெறக்கும் போதே வந்தது. இந்த ஒரு மாசம் மட்டும் குடுத்திட்டு நீ பாட்டுக்கு போயிட்டய்னா, அடுத்த மாசம், அதுக்கு அடுத்த மாசம், இங்க பாருங்க. இதெல்லாம் மாசாமாசம் வந்து போறது தான். ரொம்ப வருத்தப்படாதீங்க விஜிக்கே ஆறுதல் சொன்னாள்.
“தேவி”
“என்ன?
இந்த மாசம் மட்டும் நான் தாரேன், என்று விஜி சொன்னபோது
“அடுத்த மாசம், என்றாள் படீரென்று “
“அடுத்த மாசம்” என இழுத்தான். விஜி
உங்களோட கனிவுக்கு ரொம்ப நன்றி என்னோட கஷ்டத்த நீங்க அகேட்டதே போதும்.
எனக்கு பணமெல்லாம், வேணாம்” விடாப் பிடியாகவே வேண்டாம் என்றாள்.
“எனக்கு என்னமோ மாதிரி இருக்குங்க” விஜி சொன்னபோது விலகிச் சென்றாள் தேவி.
தேவி ” தேவி” விஜி கூப்பிட்டுப் பார்த்தும் அவள், அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அட நாமயென்ன தப்பா கேட்டுட்டமா யென்ன? கஷ்டப்படுறாங்கன்னு உதவி செய்யப்போனோம் ச்சே இதப் போயி தப்பா நெனச்சிட்டாங்களே விஜிக்கு உறுத்தல் ஏற்பட்டது.
அது முதல் தேவி, விஜியிடம் பேசுவதைத் தவிர்த்தாள்.
அவளின் கஷ்ட நஷ்டங்களை அவளுக்குள்ளயே புதைத்துக் கொண்டாள்.
தமிழச்சிகள் தமிழ்ச்சிகள் தான் தன் மானத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் என்ற பெருமித்ததோடு திரும்பினார்ன்
அப்போது அவனின் செல்போன் சிணுங்கியது.
“ஹலோ யார் பேசுறது?
“விஜியா?
“ஆமா சொல்லுங்க”
“ஒரு இருவது ஆயிரம் ரூவா பணம் வேணும்” என்ற பெண்குரல் கேட்டது.
என்னது இருவது ஆயிரமா? ஏன் வேணும்”
“கொஞ்சம் கஷ்டமாயிருக்கு என்றது எதிர்திசையிலிருந்த பெண்குரல்
“ஆமா நீங்க யாரு? ஒங்க பேரு என்ன?
“எம்பேரா? தம் பேரு
“தமிழரசிங்க” என்றாள் அந்தப்பெண்.
என்னது தமிழரசியா?
“ஆமா “
நீங்க எந்த மாநிலம்ங்க?”
என்றாள் ஆர்வமாய் ஏங்க தமிழரசின்னு தெலுங்குலயா பேர் வைப்பாங்க எல்லாம் நம்ம தமிழ்நாடு தாங்க என்று அவள் சொன்ன போது தமிழச்சிகள் எல்லாம் தேவி போல் அல்ல” என்பதை உணர்ந்தான் விஜி
ராஜா செல்லமுத்து