பெருவாயல் டி.ஜெ.எஸ் பள்ளியில் முப்பெரும் விழா

கும்மிடிப்பூண்டி, பிப்.14–

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியின் சார்பாக டி.ஜெ.எஸ் சிறப்பு விருது வழங்குதல், விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தல், சிபிஎஸ்சி பள்ளி துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஆகியவை நடைபெற்றது.

விழாவிற்கு டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து, டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் பழனி, கல்வி குழு இயக்குனர்கள் ஏ.விஜயகுமார், ஏ.கபிலன், டி.தினேஷ், ஜி.தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து அறநிலையத் துறை இணை இயக்குனர் என்.தனபால் கலந்து கொண்டார்.

விழாவில் தேசிய அளவிலான இந்தி தேர்வில் 100க்கு 98 மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர் என்.என்.ஹரிக்கும், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் அஸ்வின்ராஜிற்கும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் கே.சதீஷிற்கும், மாநில அளவில் யோகா போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சஞ்சய் குமாருக்கும், தேசிய அளவிலான யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டி.தனுஷிற்கும் விழாவில் பாராட்டி பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதேபோல விழாவில் குறுவட்ட அளவிலான தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றதோடு, மாவட்ட அளவில் நீளம் தாண்டுதலில் முதல் பரிசும், மண்டல அளவிலான மூன்றாம் இடமும் பெற்றதோடு, கபடி போட்டியில் மாநில அளவிலான தமிழக அணியில் இடம் பிடித்த மாணவி எச்.தனுஜாவிற்கும் விருது வழங்கப்பட்டது. அதே போல மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழக அணிக்காக தேர்வு பெற்று விளையாடிய மாணவர் ச.சரித்திரனுக்கும் விருதும் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிபிஎஸ்சி பள்ளி துவக்கப்பட்டு அதற்கான விண்ணப்ப படிவங்கள் பெற்றோர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

விழாவில் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திய இந்து அறநிலையத் துறை இணை இயக்குனர் என்.தனபால் பேசுகையில், விளையாட்டு உடலையும், மனதையும் வலுப்படுத்தும் என்பதால், மாணவர்கள் படிக்கும் காலத்தில் விளையாட்டில் ஈடுபாட்டை செலுத்தி உரிய பயிற்சி எடுப்பதன் மூலம் அவர்களது திறமையால் நாட்டிற்கு பெருமை தேடி தருவதோடு, அவர்கள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெறவும் வழி செய்யும் என்றார்.

விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.