திருக்குறளப்பன் திருவாழ் மார்பன் கோயில்

அறுபதாம் திவ்யதேசம் திருவண் பரிசாரம்! – மனம்
அமைதி பெற அருள் வழங்கும் உபகாரம்!!
திருக்குறளப்பன் என்னும் திருநாமம்!–மூலவர்
திருமுகம் கிழக்கு நோக்க வீற்றிருக்கும் கோலம்!!
*
திருவாழ் மார்பன் என்பது இறைவன் திருநாமம்! – கருடன்
காரி விந்தை உடைய நங்கைக்குப் பிரத்யட்சம்!!
கமலவல்லி நாச்சியார் இங்கே தாயார்! – இவர்
பெருமாளின் இடது மார்பில் வீற்றிருக்கின்றார்!!
*
மங்களா சாசனம் நம்மாழ்வார் பாசுரம்! – கோயில்
விமானம் இந்திர கல்யாண விமானம்!!
புண்ணிய தீர்த்தமிங்கே லட்சுமி தீர்த்தம்! – இது
நம்மாழ்வார் தாயாரின் அவதார தலம்!!
*
உடைய நங்கை தந்தை பெயர் திருவாழ் மார்பன்! – அவர்
வசித்த இடம் இன்றைக்கும் பஜனை மடம்!!
சிவஅம்சம் சிரஞ்சீவி அனுமாரின் விருப்பப்படி
அகத்திய முனிவர் ராமாயணம் சொன்ன இடம்!!
*
திருக்குளத்தில் இருக்குதொரு அரச மரம்! – இது
திருமால் எம்பெருமான் தரும் வரம் தரும்!!
குலசேகர ஆழ்வாரின் கைங்கரியம்! – திரு
குறளப்பன் தருவான்நல் சௌகரியம்!!